கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகள் பெரியளவில் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. எனினும் நகை சார்ந்த பங்குகள் நல்ல லாபம் கொடுத்து வருகின்றன.
இது வரவிருக்கும் மாதங்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியாவில் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நகை உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களின் வளர்ச்சியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூவல்லரி பங்குகள்
இரு ஜூவல்லரி சார்ந்த பங்குகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. இதன் இரண்டாவது காலாண்டு முடிவுகளும் சாதகமாக உள்ளன.
வலுவான தேவைக்கு மத்தியில் செப்டம்பர் காலாண்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் வலுவான செயல்பாட்டினை காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 14% வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது வலுவான தேவை அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நல்ல ஏற்றத்தில் நகை பங்குகள்
இதேபோல டைட்டன் நிறுவனமும் நகை பிரிவில் 18% வளர்ச்சியினை கண்டுள்ளது. டைட்டன் நிறுவனம் மறைந்த முதலீட்டாளர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் பேவரைட் பங்குகளில் ஒன்றாகும். இது கடந்த ஜூலையில் இருந்து 44% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. மறுபுறம் கல்யாண் ஜூவ்வர்ஸ் பங்கு விலையானது மே 22ல் இருந்து கிட்டதட்ட 78% ஏற்றம் கண்டுள்ளது.
சந்தை மதிப்பு அதிகம்
கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்த ஆண்டு ஜூலையில் இருந்து அதன் மதிப்பு கிட்டதட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது. லார்ஜ் கேப் பங்கான டைட்டன் நிறுவனமும் சுமார் 30% ஏற்றம் கண்டுள்ளது, இந்த இரண்டு பங்குகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. டைட்டன் நிறுவனத்தின் சந்தை மதிப்பினை காட்டிலும், கல்யாண் ஜூவல்லர்ஸ்-ன் சந்தை மதிப்பானது மிக அதிகம். ஆனால் பங்கு விலையில் டைட்டனை காட்டிலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பின் தங்கியுள்ளது.
முதலீட்டாளர்களை ஈர்க்கும் பங்குகள்
டைட்டன் நிறுவனம் முதலீட்டாளார்களை பெரிதும் கவரும் பங்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. எப்படியிருப்பினும் இரு நிறுவனங்களுமே நல்ல வளர்ச்சியினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களுமே இந்த காலகட்டத்தில் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தீபாவளி காலகட்டத்தில் இப்பங்கின் விலை ஏற்றம் காணலாம். ஆக இது வாங்கி வைக்க நல்ல பங்குகள் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
எவ்வளவு அதிகரிக்கும்?
தரகு நிறுவனம் டைட்டன் நிறுவனத்தின் இலக்கு விலையினை 2970 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது 13% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது. இதே கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கின் இலக்கு விலையும் 125 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் தொடர்ந்து விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், இப்பங்கின் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே டைட்டன் நிறுவனம் நகைத் துறையில் மட்டும் அல்ல, பல்வேறு துறைகளிலும் வணிகம் செய்து வருகிறது. வலுவான வளர்ச்சியினை பதிவு செய்து வருகின்து.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications