தமிழ்நாடு அரசு மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், மக்கள் எந்த மாவட்டத்திற்கு எத்தகைய அறிவிப்பு வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதேவேளையில் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று வேதாரண்யம் பகுதியில் 450 ஏக்கர் பரப்பளவில், ரூ.250 கோடி பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் செய்த பதிவுக்கு, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில், இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
அதில் முக ஸ்டாலின் அவர்கள் கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தைக் கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு முக ஸ்டாலின்? என்ற கேள்வியைக் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அண்ணாமலை அவர்களின் எக்ஸ் பதிவிக்கு பதில் கொடுத்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பதிவில் 2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா?
தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்லை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பதிவு வாயிலாகவே பதிலடி கொடுத்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications