தமிழக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், இடைக்காள வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் 2,18,991.96 கோடி ரூபாயாக இருந்த மொத்த வரி வருமான மதிப்பீடுகளை, 2021-22ஆம் நிதியாண்டின் திட்ட மதிப்பீடுகளில் 2,02,495.89 கோடி ரூபாயாக குறைக்கும் கட்டாயத்தில் உள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மொத்த வரி வருமானம்
இந்த மொத்த வரி வருமானத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் அளவீடுகளும் இருக்கும் நிலையில், மாநிலத்தின் வரி வருவாய் அளவீட்டை 1,35,641.78 கோடி ரூபாயில் இருந்து 1,26,644.15 கோடி ரூபாயாக குறைத்து அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
வரி அல்லாத அரசின் வருவாய்
இதேபோல் வரி அல்லாத அரசின் வருவாய் அளவு கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டு உள்ள வர்த்தக பாதிப்பு ஏற்பட்டு உள்ள காரணத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட 14,139.01 அளவீட்டை அடைய முடியாது என்றும் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செலவு திட்ட மதிப்பீடு
மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்னுமும் தமிழ்நாடு மீண்டு வராத நிலையில், முந்தைய அரசு அறிவித்த 41,417.30 கோடி ரூபாய் அளவிலான செலவு திட்ட மதிப்பீடு 2021-22ஆம் நிதியாண்டில் முடிவில் 58,692.68 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
இதை தொடர்ந்து 2021-22 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.33 சதவீதம் என 15வது நிதிக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஒட்டு மொத்த விதிகளுக்குள் நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி விகிதத்தை அதிகரிப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சீர்திருத்தமாகும். மேலும் வெள்ளை அறிக்கை உருவாக்கியதில் கண்டுப்படிக்கப்பட்ட முக்கியமான தரவு என்னவென்றால் 2000-07 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரி விகிதம் 8.48 சதவீதமாக இருந்தது.
65,000 கோடி ரூபாய் இழப்பு
இது 2020-21ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரி விகிதம் 5.46 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வித்தியாசம் மூலம் தமிழ்நாட்டுக்கு சுமார் 65,000 கோடி ரூபாய்க்கும் மேலான வருவாய் இழப்பை சந்தித்துள்ளோம். இதை கட்டாயம் சரி செய்தாக வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு உள்ளோம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications