தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஐடி மற்றும் டெக் துறையில் கூடுதல் முதலீட்டையும், நிறுவனங்களையும் ஈர்க்கும் முக்கியமான இலக்குடன் பட்ஜெட் அறிக்கையில் புதிய ஐடி பார்க், டைடல் பார்க், நியோ டைடல் பார்க் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டம் மட்டும் அல்லாமல் வேகமாக வளரும் ஐடி நிறுவனமாகவும் விளங்கும் கோவையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வண்ணம் புதிய ஐடி பார்க் கட்டப்பட உள்ளது.

கோயம்புத்தூரில் ஏற்கனவே 2 ELCOT டவர்கள் கட்டப்பட்டு வரும் வேளையில், இந்தப் புதிய ஐடி பார்க் திட்டம் கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள டெக் ஊழியர்கள், பட்டதாரிகளை மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டு பட்ஜெட் அறிக்கையில் கோயம்புத்தூரில் புதிய ஐடி பார்க் சுமார் 20 லட்சம் சதுரடி பரப்பளவில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இந்த மெகா திட்டத்தை அறிவுசார் பொருளாதாரத்தின் கீழ் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
மதுரை, திருச்சி: இதைத் தொடர்ந்து மதுரையில் 345 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.4 லட்சம் சதுரடி பரப்பளவில் ஒரு டைடல் பார்க், திருச்சியில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.3 லட்சம் சதுரடி பரப்பளவில் ஒரு டைடல் பார்க் கட்டப்பட உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியோ டைடல் பார்க்: மேலும் தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ள நியோ டைடல் பார்க் மூலம் 13000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில் நியோ டைடல் பார்க் எனப்படும் சிறிய டைடல் பார்க் அமைக்கப்படும் என பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications