தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரை மாவட்டத்திற்குத் தமிழ்நாட்டு முதலீட்டாளர் மாநாட்டில் எவ்விதமான முதலீடும் கிடைக்கவில்லை என மதுரை மக்கள் புலம்பியதை இன்றளவும் மறக்க முடியாது, டிவிட்டர் முழுக்க மதுரை தொடர்பான பதிவுகள் நிரம்பி வழிந்தது. வருவாய், வர்த்தக வாய்ப்புகள் என நிறைந்த மதுரை மாவட்டத்தில் புதிய வளர்ச்சி திட்டங்கள் வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் மதுரையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல பணிகள் நடந்து வருகிறது. இதேவேளையில் புதிய வளர்ச்சி திட்டங்களுக்கான ஆய்வு பணிகளும் தனியார் மற்றும் அரசு சார்ப்பில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் மதுரை சார்ந்த அறிவிப்புகளுக்குத் தனிக் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது தென் மாவட்டங்களாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியவை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களும், முதலீடுகளும் தென் தமிழகத்தை நோக்கி பயணித்து வருகிறது.
இப்படியிருக்கையில் மதுரையில் கடந்த சில காரணங்களாக ஐடி மற்றும் டெக் துறை சார்ந்த நிறுவனங்களை ஈர்ப்பதில் சிறந்து விளங்குகிறது. ஏற்கனவே 2-3 டெக் பார்க்குகள் மதுரையில் கட்டப்பட்டுப் பல நிறுவனங்கள் அங்கு இயக்கி வரும் வேளையில், மதுரை மக்கள் அதிகம் கேட்டது சிப்காட்.
மதுரை மாவட்டத்தின் தொழிற்துறை வளர்ச்சி மிகவும் அவசியமானச் சிப்காட் தேவையென நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் அறிக்கையில் மதுரை சிப்காட் வருமான என்பது தான் மதுரை மக்களின் முக்கியமான கேள்வி.
மதுரையில் ஐடி மற்றும் டெக் நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களுடைய அலுவலகத்தைத் திறந்து வரும் வேளையில், சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் மிகப்பெரிய ப்ராடெக்ட் நிறுவனமான ZOHO தனது அலுவலகத்தைத் திறந்தது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்தின் சூலூர் தாலுக்காவில் வரப்பட்டி கிராமத்தில் Varapatti Defence Industrial Park அமைக்கத் தமிழ்நாடு அரசு புதிய சிப்காட் பகுதியை உருவாக்க உள்ளது.
இது கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்காவாகும். வரப்பட்டி கிராமத்தில் சுமார் 373 ஏக்கரில் இந்த டிபென்ஸ் காரிடார் அமைய உள்ளது. தமிழ்நாடு அரசின் சிப்காட் மற்றும் TIDCO இணைந்து சுமார் 293 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தப் பிரம்மாண்ட டிபென்ஸ் காரிடாரை கட்டமைக்க உள்ளது.
சிப்காட் அமைப்பு 373 ஏக்கரில் Varapatti Defence Industrial Park திட்டத்தின் அறிக்கையைச் சுற்றுச்சூழல் ஒப்புதலுக்காக விண்ணப்பத்தையும் சமர்ப்பித்துள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்த உடன் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications