TN Budget 2024: புதிய டைடல் பார்க் அறிவிப்பு வருமா..? நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திட்டம் என்ன..?

சென்னை: 2024-25ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை அறிக்கையைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று காலை 10 மணிக்குப் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களைத் தொடர்ந்து நிதி அமைச்சராகப் பதவியேற்றிய தங்கம் தென்னரசு முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் பட்ஜெட் அறிக்கையில் இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்பாக இருப்பது டைடல் பார்க், ஐடி பார்க் தொடர்பான அறிவிப்புகள் தான்.

TN Budget 2024: புதிய டைடல் பார்க் அறிவிப்பு வருமா..? நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திட்டம் என்ன..?


அடுத்த சில மாதத்தில் பல ஆயிரம் பேர் பட்டப்படிப்பை முடிந்து கல்லூரியை விட்டு வெளியேறும் வேளையில், ஐடி மற்றும் டெக் துறை சார்ந்து வளர்ச்சி தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இதேவேளையில் தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாமல் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து 2ஆம், 3ஆம் தர நகரங்களில் தங்களுடைய அலுவலகத்தைத் திறந்து வரும் வேளையில், தமிழ்நாடு அரசின் டைடல் பார்க் மற்றும் நியோ டைடல் பார்க் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு அரசு கட்டியுள்ள பல ஐடி பார்க் இன்னும் திறக்கப்படாத நிலையில் தனியார் ஐடி பார்க்குகள் அடுத்தடுத்து கட்டப்பட்டும், திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே கட்டப்பட்டுத் தயார் நிலையில் இருக்கும் கோயம்புத்தூர் எல்காட் ஐடி டவர்கள், திருச்சி ஐடி டவர் ஆகியவற்றை விரைவில் திறக்கும் பணிகளை அரசு வேகப்படுத்த வேண்டும் என நீண்ட காலக் கோரிக்கை உள்ளது.

இந்த நிலையில் புதிய ஐடி பார்க் அமைப்பது குறித்து அறிவிப்புகள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் என அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. பெரு நகரங்களில் டைடல் பார்க் திட்டத்தையும், சிறிய நகரங்களுக்கு நியோ டைடல் பார்க் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டத்திலும் புதிய டைடல் பார்க் அல்லது ஐடி பார்க் விரிவாக்கத் திட்டங்கள் வெளியாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மதுரைக்கு வருமா..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+