தமிழ்நாடு பட்ஜெட் 2025: சென்னை முழுக்க 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு!

2025 முதல் 2026-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை சுமார் 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இதற்கான கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது. அதிலிருந்து 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் நாளை மார்ச் 14ஆம் தேதி காலை 9:30 மணி அளவில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த ஆண்டு பட்ஜெட் குறித்த விவரங்கள், மக்களுக்கு எளிதாக சென்றடையும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு மண்டலங்களில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பொது இடங்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடபட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் 2025: சென்னை முழுக்க 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு!

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பார்க், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், மெரினா பீச், பாண்டி பஜார் மற்றும் கத்திப்பாரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்ஜெட் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலேயே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்ததாகவும்.. நடப்பு நிதியாண்டிலும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறப்பான கொள்கைகள் காரணமாக தமிழகம் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் தனிநபர்களின் வருமானம் முன்பு இருந்ததை விட 1.64 மடங்கு அதிகரித்து ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் இயங்கக்கூடிய சேவை துறைகள் வேகமாக மீண்டெழுந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போது பட்ஜெட் குறித்த ஒரு வீடியோவையும் ஸ்டாலின் தனது X பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் "தமிழ்நாடு பட்ஜெட் 2025-2026.. எல்லோருக்கும் எல்லாம்" என்ற ஒரு வாசகத்துடன் கூடிய பட்ஜெட் லோகோ இடம்பெற்றிருந்தது. அதில் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட "₹" என்ற ரூபாய் சின்னத்திற்க்கு பதிலாக தமிழ் எழுத்தான "ரூ" இடம் பெற்றிருந்தது. கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையில் வழக்கமான ரூபாய் சின்னம்தான் பயன்படுத்தப்பட்டிருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+