இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறந்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக சில முக்கிய திட்டங்கள் வெளியாகியுள்ளது.
1. மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் கையெழுத்திட்ட முதல் 5 திட்டங்களில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்ய உதவும் "விடியல் பயணம்" திட்டமும் ஒன்று. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்கள் மற்றும் படிக்கும் மாணவ மாணவியரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தினமும் இலவச பேருந்தின் மூலம் 50 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயணம் செய்கின்றனர். இந்த ஒரு திட்டத்தின் மூலம் பெண்கள் மாதா மாதம் பேருந்து கட்டணத்திற்காக செலவு செய்யக்கூடிய தொகையை சேமிப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடியல் பயணம் திட்டத்தினால் ஒரு பெண் மாதாமாதம் ரூ. 888 வரை சேமிக்க முடிகிறதாம்.
2. அடுத்ததாக மகளிருக்கு நிதி சுதந்திரம் வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிருக்கு மாதம் மாதம் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பதாரர்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்திற்காக 13,877 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. ஏழைப் பெண்களும் சரிவர உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகளுக்கு மாதம் மாதம் கல்வி உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கு இதற்காக 420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு திட்டத்தின் காரணமாக மாணவியர் சேர்க்கையில் 19% அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாம்.
4. தமிழ்நாட்டு மாணவ மாணவியருக்கு பாதுகாப்பான அதேசமயம் தரமான விடுதிகள் வழங்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் "தோழி விடுதிகள்". இந்த திட்டம் ஏற்கனவே திருச்சி, தாம்பரம் என தமிழ்நாட்டின் முக்கியமான 13 இடங்களில் இயங்குகிறது. தற்போது இந்த திட்டத்தினை மேலும் விரிவு படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழகத்தின் கிராமங்களில் வசிக்கும் பெண்களும் தங்களுடைய கனவை நோக்கி ஓடுவதற்கு பெரு நகரங்களுக்கு செல்லும்போது இந்த விடுதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. இன்று பல பெண்களுக்கு தங்கள் வாழ்வை மேம்படுத்தும் விதமாக இயங்கிக் கொண்டிருக்கும் சுய உதவி குழு திட்டத்தையும் விரிவு படுத்த அரசு முயற்சித்து வருகிறது. அதற்காக இந்த பட்ஜெட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு 37,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே 4 லட்சத்திற்கும் அதிகமான குழுக்கள் இயங்கி வரும் நிலையில் தற்போது இந்த திட்டத்தினை விரிவு படுத்தி சுய உதவி குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிரை குறி வைத்து 1000 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications