சென்னை: 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
எல்லார்க்கும் எல்லாம் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பொறுத்தவரை அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சென்னையில் அடையாறு நிதியை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு 1500 கோடி ரூபாயை ஏற்கனவே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் இருப்பதாகவும் அடுத்த 15 மாதங்களுக்குள் பணிகள் முழுமை அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில் அங்கே போக்குவரத்து நெரிசலை தீர்க்க புதிதாக மேம்பாலம் கட்டப்படும் என்றார். வேளச்சேரியில் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 310 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.
கிராமப்பகுதிகளில் 120 கோடி ரூபாய் மதிப்பில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி தரப்படும் என தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஆண்டு 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற திட்டம் தொடங்கப்பட்டது, அது 2025-26ஆம் நிதியாண்டிலும் தொடரும் என்றும் அவர் கூறினார்.
உலக தமிழ் ஒலிம்பியாட் ஆண்டுதோறும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்ட தங்கம் தென்னரசு, அகரம் என்ற மொழிக்கான அருங்காட்சியகம் நிறுவப்படும் என அறிவித்தார். மதுரையில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் இந்திய மொழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என கூறினார்.
இது தவிர டெல்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் ஆசிய நாடுகளில் எல்லாம் தமிழ் மொழிக்கான புத்தக காட்சி நடைபெறும் என அறிவித்தார். இதற்காக 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்கிறது என கூறினார். தமிழ் மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்க முதல்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.
ஐநா அவையில் அங்கீகரிக்கப்பட்ட 193 மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும் என்றும் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ்நாடு முழுவதும் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் தங்கம் தென்னரசு வெளியிட்டார். சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
Story Written By: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications