தமிழ்நாடு அரசு 2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல முக்கியமான திட்டங்களை அறிவித்துள்ளது. இதில், ஓசூரில் 5 லட்சம் சதுர அடியில் TIDEL தொழில்நுட்ப பூங்காவும், விருதுநகரில் மினி-TIDEL பூங்கா அமைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்த திட்டங்களுக்கு மொத்தம் 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகின்றன மற்றும் 6,600 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ஓசூர்- புதிய பாதை: ஓசூரில் உருவாகும் TIDEL உயர் தொழில்நுட்ப பூங்கா, மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரிவுபடுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. ஏற்கனவே விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில் அருகில் இருக்கும் பெங்களூருக்கு இணையான வளர்ச்சியை ஓசூரிலும் உருவாக்க இந்த TIDEL High-Tech Park அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஹைய் டெக் பூங்கா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை (IT/ITeS) வர்த்தகத்தை ஓசூரில் முன்னேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் நகரம், இதுநாள் வரையில் MSME களஞ்சியமாக மட்டுமே இருந்த நிலையில் ஐடி துறைக்கான வளர்ச்சி பாதையை இப்புதிய டைடல் பார்க் மூலம் துவங்கப்பட்டு உள்ளது. ஓசூர் பெங்களூருக்கு அருகாமையில் இருப்பதால், இது பல சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாக ஓசூர் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப பூங்காவின் மூலம், புதிய நிறுவனங்கள் உருவாகுவதுடன், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் உகந்த சூழலை உருவாக்க முடியும். இதன் மூலம், மாநிலத்தின் வடமேற்கு மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
விருதுநகர் - மினி TIDEL பூங்கா: தமிழ்நாட்டில் நியோ டைடல் பார்க் திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ள நிலையில், விருதுநகரில் உருவாகும் மினி-TIDEL பூங்கா, சிறிய அளவிலான IT நிறுவனங்களுக்கு ஆதரவாக அமைக்கப்படும் என நிதியமைச்சர் இன்றைய பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார். இது இளம் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தங்கள் சொந்த மாவட்டத்திலேயே உயர்தர வேலைவாய்ப்புகளை வழங்கும் வாய்ப்பை உருவாக்கும்.
இந்த மினி-TIDEL பூங்காவில் பொதுவாக குறைந்தது 500 ஐடி ஊழியர்கள் குறைந்தபட்சம் பணியாற்றும் வகையில் அமைக்கப்படும். மேலும், இந்த நியோ டைடல் பார்க் திட்டங்களில் அதிநவீன வசதிகள், உயர்மட்ட இணைய இணைப்பு மற்றும் மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்கும் அமைப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இதனால் ஒரு சிறிய ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் எளிதாக இயங்க முடியும் கட்டமைப்பை கொண்டுள்ளது.
வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி: இந்த இரண்டு திட்டங்களும் மாநிலத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதோடு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவும். குறிப்பாக, இளைஞர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களில் வேலைவாய்ப்புகளை வழங்குவது மாநில அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.
தமி ழ்நாட்டின் மாநிலத்தின் distributed growth கொள்கையின் கீழ், இந்த திட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொருளாதார வளர்ச்சியை சமமாகப் பகிர்ந்து கொள்ள உதவும். இதை பொருளாதார ஆய்வறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளில் டெக் துறையில் மெகா முதலீடுகளை சென்னையை தாண்டி மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டுவர கவனம் செலுத்தி வருகிறது. இது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அடிப்படையாக விளங்குகிறது.
தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னையைத் தாண்டி பெரிய முதலீடுகளை கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் புதிய வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளோம் என தமிழ்நாடு தொழில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த 2 திட்டங்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு பல்வேறு இடங்களில் TIDEL NEO பூங்காக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது. தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட் மூலம் ஓசூரில் ஐடி துறை வளர்ச்சிக்கான புதிய புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications