தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை சென்னை மட்டுமின்றி பிற பகுதிகளுக்கும் விரிவாக்கும் நோக்கத்தில், 4 நான்கு புதிய உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Center - GCC) உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த மையங்கள் கோவை, மதுரை, திருச்சி, வேலூர் நகரங்களில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தற்போது மாநிலத்தின் பெரும்பாலான GCC மையங்கள் சென்னையில் தான் செயல்பட்டு வருகின்றன. இதனால், வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளங்கள் சென்னையிலேயே மையப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையை மாற்றும் நோக்கில், மற்ற முக்கிய நகரங்களிலும் இந்த மையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம் கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் வேலை வாய்ப்புகள், தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சிகள், மற்றும் உணர்த்தல் மையங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இந்த திட்டத்துக்கு உறுதுணையாக, தமிழ்நாடு அரசு GCC-களுக்கான தனிச்சிறப்பு கொள்கையை (2024-27) வெளியிட்டுள்ளது. இதில் ஊதியத் தொகை மானியங்கள், மூலதன வசதிகள், புதிய கண்டுபிடிப்பு ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
கோவை தற்போது தென்னிந்தியாவின் அடுத்த GCC ஹாட்ஸ்பாட் ஆக உருவெடுப்பதாக CBRE வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கல்வியில் வலிமையான அடித்தளம், குறைந்த செலவில் தரமான பணியாளர்கள் கிடைக்கும் விகிதம் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் அதிகரித்து வரும் ஈர்ப்பு ஆகியவை இந்த நகரத்தின் முக்கிய பலங்கள் ஆகும். பல பெரிய நிறுவனங்கள் கோவையை அடுத்த கட்ட தொழில்நுட்ப சேவை விரிவாக்கத்திற்கு தேர்வு செய்துள்ளனர்.
அதேபோல், மதுரை தற்போது 300-க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப மற்றும் பிசினஸ் பிராசஸிங் நிறுவனங்களுக்கு தாயகமாக உள்ளது. மேலும், ரூ.11,000 கோடி மதிப்பில் அமைக்கப்படும் மதுரை-திண்டுக்கல்-விருதுநகர்-தேனி தொழில் வளர்ச்சி நெடுஞ்சாலை திட்டம் இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் பலமாக அமைகிறது.
திருச்சி மற்றும் வேலூர் ஆகிய நகரங்கள் அந்தந்த மாவட்டங்களின் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்கு தயாரான பணியாளர்களால் கவனம் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, வேலூர், அங்குள்ள VIT பல்கலைக்கழகம் மற்றும் CMC மருத்துவமனை போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களால் மருத்துவ மற்றும் பொறியியல் தொடர்பான GCC நிறுவனங்களுக்கு சிறந்த இடமாக உருவாகி வருகிறது.
சென்னை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 95,000 புதிய தொழில்நுட்ப ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதன் மூலம், சென்னையில் தற்போது மொத்தமாக 2,13,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது 174-க்கும் மேற்பட்ட Fortune Global 500 நிறுவனங்கள் தங்களின் GCC மையங்களை அமைத்துள்ளன.
இதன் காரணமாக, ஒவ்வொரு மாநிலமும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் போட்டியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு மாற்றாக உருவெடுக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கான முக்கிய ஆதாரங்களாக, அரசு குறைந்த செலவில் தரமான பணியாளர்கள், முன்னோக்கிய உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 லட்சம் STEM பட்டதாரிகள் வெளியேறும் கல்வி முறை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு பன்முக தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின் ஹப் ஆக மாறும் என்று நம்பப்படுகிறது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications