தமிழ்நாட்டின் பாரம்பரியமான பொங்கல் பண்டிகை ஆனது ஒவ்வொரு வருடமும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் சிறப்பை போற்றும் வகையிலும், அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் சிறப்பிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை எவ்வித வறுமையும் இன்றி, அனைவரும் மன மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் வருடவருடம் பொங்கலுக்காக பொங்கல் வைக்க சிறப்பு பொருட்களுடன் பணம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சர்க்கரை, கரும்பு, அரிசி முதலிய பரிசு தொகுப்புடன் ரூ. 1000 ரொக்கமும், இலவச வேட்டி, சேலை முதலியவை அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த முறை வரும் பொங்கல் பண்டிகைக்கு மகளிர் உரிமை தொகையுடன் சேர்ந்து ரூ.2000 ஆக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய 1.77 கோடி வேட்டிகள் மற்றும் பல சேலைகள் தயாரிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கிடையில், வரும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வெவ்வேறு ரகங்களில் 1.77 கோடி வேட்டி மற்றும் 1.77 கோடி சேலைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், டிசம்பர் 31ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தமிழக கைத்தறி துறை அமைச்சர் R.காந்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து ரேஷன் கடைகள் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 தேதிக்குள் இலவச வேட்டி, சேலைகள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை, வேட்டி, புடவைகள் தயாரிப்பதற்காக ஆகஸ்ட் 27, 2024 தேதியிட்ட உத்தரவை பிறப்பித்ததுடன், இத்திட்டத்திற்காக நூல் கொள்முதல் மற்றும் நெசவாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1,77,64,476 புடவைகள் மற்றும் 1,77,22,995 வேட்டிகள் தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கும், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கும் இவை விநியோகிக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இலவசப் புடவைகள் தயாரிப்பதற்காக பாலியஸ்டர் துணிநூல் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பருத்தி நூல் மட்டுமே வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி கூட்டத்தில் பாலியஸ்டர் நூலை 2024-25 க்கு பயன்படுத்தாமல் 2025-26 க்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில், புடவை உற்பத்திக்கு பருத்தி நூலைப் பயன்படுத்துவதை இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை வரவேற்று, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திட்டத்தின் மூலம் 63,000 விசைத்தறிகள் பயன்பெறுவர். கடந்த ஆண்டு விசைத்தறியில் கிட்டத்தட்ட ஒரு கோடி வேட்டிகளும், 1.24 கோடி புடவைகளும் உற்பத்தி செய்யப்பட்டன. இது இந்த ஆண்டு 1.77 கோடி வேட்டிகளாகவும், 1.77 புடவைகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 77 லட்சம் வேட்டிகளும், 53 லட்சம் புடவைகளும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications