தமிழ்நாடு அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒரு இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யும் அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஐஐடி போன்ற முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் முழுமையான கல்விச் செலவுகளை அரசே ஏற்கவுள்ளது. அதோடு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் முதல் பயணச் செலவையும் தமிழக அரசே வழங்கும்.
இந்தத் திட்டம் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களைப் போலவே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் தங்களுடைய திறமையை அதிகரித்து உலக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றாக படித்தாலும் சில அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கள் கல்லூரி செலவுகளை ஏற்கும் அளவிற்கு வசதி இருப்பதில்லை. இது போன்ற மாணவர்களை குறி வைத்து அரசு தொடங்கி இருக்கும் இந்த திட்டம் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோருக்கும் நிம்மதி அளித்துள்ளது.
முக்கிய பலன்கள்: அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் சமூக நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அதோடு தங்களின் திறமையை மேம்படுத்திக் கொண்டு ஆராய்ச்சி, தொழில்நுட்பம், கலை, இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரசு பள்ளி மாணவர்களும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்.

திறமையான தொழில் முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள், பொறியாளர்கள் போன்ற நபர்களை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். உயர் கல்வி பெற்ற மாணவர்கள் உலக அளவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்த திட்டம் உதவிகரமானதாக இருக்கும். அரசு பள்ளிகளில் படிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் தங்கள் கனவு பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து படிக்க பெரிதும் உதவும்.
இந்தத் திட்டம், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications