சென்னை: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் முழு லாகடவுன் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் சில தளர்வுகளுக்கு பின்பு, தற்பொது தமிழக அரசும் சில தளர்வுகளை அளித்து வருகிறது.
அது கொரோனாவால் தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை பூங்கா செயல்பாடுகளை நிறுத்திய ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 17 பெரிய தொழில்துறை பிரிவுகளுக்கு மீண்டும் பணிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் கிண்டி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட தொழில்துறை பிரிவுகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் பணிகளைத் தொடங்கும். அவ்வாறு தொடங்கும் போது கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் மாநில அரசு, பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
அதன் படி, நிறுவனங்கள் தற்போது 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். மற்ற நடவடிக்கைகளில் தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கண்கானித்தல் மற்றும் பேஸ் மாஸ்க் கட்டாயமாக்குவது, இரண்டு முறை கிருமி நீக்கம் செய்தல் என பல விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளது. அதோடு சரியான சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொழில்துறை பூங்காக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதோடு அறிகுறி உள்ள தொழிலாளர்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டம் உள்ளிட்ட பல அதிரடியான கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, மத்திய அரசு லாக்டவுனை அறிவிக்கும் ஒரு நாள் முன்பே, இங்கு தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்து இருந்தாலும், பலி எண்ணிக்கையும் 103 தொட்டுள்ளது. இதில் தமிழகத்தின் தலை நகரான சென்னையில் மட்டும் 10,000-க்கு மேல் தாக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications