தமிழ்நாட்டில் பல உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் சமீபத்தில் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் அடுத்தடுத்து இரு முக்கியமான திட்டத்தை அறிவித்து ஒட்டுமொத்த உற்பத்தி சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.
ஆம் பாக்ஸ்கான் ஸ்மார்ட்போன்-ஐ மட்டுமே தயாரித்து வந்த நிலையில் தற்போது பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உடன் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு மற்றும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இதைவிட முக்கியமாக இவ்விரு திட்டத்தையும் இந்தியாவில் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.
தீ விபத்துக்கு பின் விற்பனை சரிவு.. ஓலா-வின் எதிர்காலம் என்ன..?

பாக்ஸ்கான்
பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரு தொழிற்சாலைகளை வைத்து இயங்கி வரும் நிலையில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு மற்றும் எலக்ட்ரிக் கார் உற்பத்தி என இரு முக்கியத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது, இந்தத் தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டில் அமைக்கப் பேச்சுவார்த்த துவங்கியுள்ளது.

Guidance Tamilnadu அமைப்பு
தமிழ்நாட்டு அரசின் முதலீடு ஈர்க்கும் மற்றும் ஒற்றைச் சாலரம் பிரிவின் நோடல் ஏஜென்சியான Guidance Tamilnadu அமைப்பு சார்பாக, இந்த அமைப்பின் தலைவர் பூஜா குல்கர்னி ஐஏஎஸ் டெல்லியில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு-வை தமிழ்நாட்டில் விரிவாக்கம் பணிகள் குறித்துச் சந்தித்தார்.

பாக்ஸ்கான் தலைவர்கள்
இவர்களுடன் பாக்ஸ்கானின் EV பிரிவின் தலைவர் திரு. கே சியு, மெக்கானிக்கல் என்க்ளோசர்ஸ் பிரிவின் தலைவர், திரு. ஜெயின்-ஹெர் வு; மற்றும் செமிகண்டக்டர் பிரிவின் தலைவரான திரு. பாப் சென் ஆகியோர் உடன் தமிழ்நாடு அரசும் பாக்ஸ்கான் அரசுன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை செய்தனர்.

EV, செமிகண்டக்டர் துறை
டெல்லியில் பாக்ஸ்கான் தலைவர் யங் லியுவைச் சந்தித்து, இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக் பிரிவில் அவர்களின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் EV, செமிகண்டக்டர்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் அவர்கள் நுழைவது குறித்து விவாதிப்பது சிறந்த வாய்ப்பு என Guidance Tamilnadu டிவீட் செய்துள்ளது.

2006 முதல்
Foxconn உடனான கூட்டாண்மை 2006 ஆம் ஆண்டில் இல் தொடங்கித் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் தனது டிவீட்டில் குறிப்பிட்டு உள்ளது கைடென்ஸ் அமைப்பு. மேலும் தமிழ்நாட்டின் ஆதரவு, வணிகம்-செயல்படுத்தும் எகோசிஸ்டம் மற்றும் பல்வேறு Ease of Doing முயற்சிகளைப் பாக்ஸ்கான் இந்தச் சந்திப்பில் பாராட்டியுள்ளது.