தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 இல் நடத்தியிருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் மக்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெறுகிறது.
இந்த 2 நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் தமிழ்நாடு இக்கூட்டத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னிலையில் தமிழக அரசு செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கையை வெளியிட உள்ளது.

இது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க திட்டமிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரிய ஈர்ப்பு சக்தியாக விளங்கும். தமிழ்நாட்டில் பறந்து விரிந்து இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தளத்திற்கு செமிகண்டக்டர் தொழிற்சாலை மிகவும் முக்கியமானது, இதன் காரணமாகவே தமிழ்நாடு அரசு புதிய கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டுன் போட்டிப்போடும் குஜராத் அரசு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உள்ள செமிகண்டக்டர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், அதன் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாடு அடுத்த வாரம் நடத்துகிறது. இதன் வாயிலாக இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த மாபெரும் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு முன்னதாகவே குஜராத் மாநில அரசு 58 நிறுவனங்களுடன் 86 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் தமிழ்நாடும், குஜராத் மாநிலமும் நேருக்கு நேர் போட்டிப்போட உள்ளது.


Click it and Unblock the Notifications