சூப்பர் கம்பியூட்டர் வாங்கும் தமிழ்நாடு அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்வி, தொழிற்துறை எனப் பல துறையில் தமிழ்நாடு இன்று முன்னோடியாக இருக்கத் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்படும் திட்டங்களைச் சரியான முறையில் சரியான நேரத்தில் செயல்படுத்தியதால் மட்டுமே இத்தகைய உயர்ந்த வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

இந்த வகையில் வானிலை மற்றும் வானிலை சார்ந்த கணிப்புகள், ஆய்வுகள், கணக்கீடுகளைச் சரியமான முறையிலும், முன்கூட்டியே கணிக்கும் வகையில் தமிழக அரசு சூப்பர் கம்பியூட்டர் உருவாக்கும் முக்கியமான திட்டத்தை 2022 -23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் வரி உயர்வு, கட்டண உயர்வு இருக்குமா..? பழனிவேல் தியாகராஜன் திட்டம் என்ன..? பட்ஜெட்டில் வரி உயர்வு, கட்டண உயர்வு இருக்குமா..? பழனிவேல் தியாகராஜன் திட்டம் என்ன..?

 சூப்பர் கம்யூட்டர்

சூப்பர் கம்யூட்டர்

இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வானிலை ஆய்வில் பயன்படுத்துவதற்காகச் சூப்பர் கம்யூட்டர் மற்றும் வானிலை மேம்பாட்டுப் பணிகளுக்குச் சுமார் 10 கோடி கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பேரிடர் வரும் முன் சீராகக் கணிக்க வானிலை மையங்களும் கருவிகளும் மேம்படுத்த இந்த 10 கோடி ரூபாய் நிதி பயன்படுத்த உள்ளது.

 சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

இது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் சென்னை வெள்ளங்களைத் தடுக்க ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக 2022-23ஆம் நிதியாண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிதியமைச்சர்

நிதியமைச்சர்

வானிலையைத் துல்லியமாகக் கணிக்க,"பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை" மேம்படுத்துவதன் அவசியத்தை, அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளது என நிதியமைச்சர் கூறினார்.

புதிய கட்டமைப்பு

புதிய கட்டமைப்பு

பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் (super computers)உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 கல்வித்துறை

கல்வித்துறை

கல்வித்துறைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் ரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் தனியார் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 பயிர்க்கடன் திட்டம்

பயிர்க்கடன் திட்டம்

வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ள ஜிஎஸ்டி தொகையால் இந்த ஆண்டு 20,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TN Govt setup supercomputer for weather forecast and disaster forecast

TN Govt setup supercomputer for weather forecast and disaster forecast சூப்பர் கம்பியூட்டர் வாங்கும் தமிழ்நாடு அரசு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X