தமிழ்நாடு அரசு தனது இடைக்கால பட்ஜெட் 2026-இல் தகவல் தொழில்நுட்பத் துறையை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் IT துறையை வளர்ச்சி அடைய செய்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு TIDEL பூங்காக்கள் மற்றும் மினி IT பூங்காக்கள் அமைத்து வருவதை சுட்டிக்காட்டின.

புதிய TIDEL பூங்காக்கள்
திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய மூன்று இடங்களில் புதிய TIDEL பூங்காக்கள் பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.1,070 கோடி செலவிடப்பட உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்த பூங்காக்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு IT நிறுவனங்களை ஈர்த்து, உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் IT தொழில் வளர்ச்சி வேகமெடுக்கும்.
இந்தியாவில் ஐடி துறை வளர்ச்சி அடையும் வேளையில் தமிழ்நாட்டிற்கும் ஐடி துறை நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக சென்னையில் முதல் முதலார 1998ஆம் ஆண்டு டைடல் பார்க் கட்டுமானம் துவங்கியது. சென்னையில் மட்டுமே இருந்த டைடல் பார்க் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது ஸ்டாலின் அரசு. இதற்காக நியோ டைடல் பார்க் திட்டத்தை அறிமுகம் செய்து, அதை தொடர்ந்து மினி டைடல் பார்க் எனவும் பிரித்தது.
TIDEL Neo IT பூங்காக்கள்
விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில் TIDEL Neo மினி IT பூங்காக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவை சிறு மற்றும் நடுத்தர IT நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக இந்த நியோ டைடல் பார்க் திறக்கப்பட்ட 24-48 மணிநேரத்திற்குள் மொத்த அலுவலகமும் புக் செய்யப்பட்டது. இத்திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு அருகிலேயே உயர்தர வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
மினி IT பூங்காக்கள் விரிவாக்கம்
இதை தொடர்ந்து நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மினி IT பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.388 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை மாவட்ட அளவில் IT தொழிலை வளர்த்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஆரம்பக்கட்ட பணியாக இருக்கும். இதன் பயன்பாடு, வளர்ச்சி ஆகியவைற்றை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
25,500 புதிய வேலைவாய்ப்புகள்
மாநிலம் முழுவதும் IT துறையை விரிவுபடுத்தும் இத்திட்டங்கள் மூலம் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதியமைச்சர் இன்று இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தார்.
எதற்காக இந்த நியோ ஐடி பார்க், மினி ஐடி பார்க்..?
TIDEL பூங்காக்கள் தமிழ்நாட்டின் Tier 2 மற்றும் Tier 3 நகரங்களுக்கு மிக முக்கியமானவை, ஏனெனில் அவை சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மட்டுமே அடங்கியிருந்த IT வளர்ச்சியை மாநிலம் முழுவதும் பரவச் செய்கின்றன.
வேலைவாய்ப்பு உருவாக்கம்: TIDEL Neo மற்றும் மினி IT பூங்காக்கள் சிறிய நகரங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு உயர்தர IT வேலைகளை அருகிலேயே கொண்டு வருகின்றன. பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறைவதால் குடும்ப பிரிவு, பயணச் செலவு, வாடகை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் குறைகின்றன.
பொருளாதார சமநிலை வளர்ச்சி (Distributed Growth): 2ஆம், 3ஆம் நிலை நகரங்களில் IT நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், GCCகள் வருவதால் உள்ளூர் பொருளாதாரம் வலுப்படுகிறது. ரியல் எஸ்டேட், உணவு, போக்குவரத்து, சேவை துறைகள் வளர்ச்சி அடைகின்றன. கிராமப்புற இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே தொழில் செய்ய முடியும்.
நகரமயமாக்கல் மற்றும் குடியேற்றக் குறைப்பு: பெருநகரங்களுக்கு அதிக குடியேற்றம் ஏற்படும் போது போக்குவரத்து நெரிசல், விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. TIDEL பூங்காக்கள் மூலம் 2ஆம், 3ஆம் நிலை நகரங்கள் மூலம் மாநில அளவில் சமநிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறது.
மொத்தத்தில், TIDEL பூங்காக்கள் தமிழ்நாட்டின் 2ஆம், 3ஆம் நிலை நகரங்களை IT மையங்களாக மாற்றி, வேலைவாய்ப்பு, வருமானம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உயர்த்தி, சென்னை மட்டும் சார்ந்த வளர்ச்சியை சமநிலைப்படுத்துகின்றன. இது மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் IT துறை வளர்ச்சி வேகமெடுத்து வரும் நிலையில், இத்தகைய திட்டங்கள் IT மற்றும் டெக் துறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்துகின்றன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications