கீர்த்தனா குறிவைத்த 3 இடம்.. சென்னையின் அடுத்தக்கட்ட வளர்ச்சி இந்த ஏரியாவுல தான்!

விஜய் தலைமையிலான அரசு 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மேம்படுத்த முக்கிய இலக்கு வைத்திருக்கும் வேளையில், இந்த முக்கிய இலக்கை அடைவதில் தமிழ்நாட்டின் தொழிற்துறைக்கும், தொழிற்துறை அமைச்சருக்கும் முக்கிய பங்கு உள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்கத்தை வேகப்படுத்த தொழிற்துறை அமைச்சரான கீர்த்தான முக்கிய ஆயுதமாக எடுத்திருப்பது ஐடி, ஜிசிசி நிறுவனங்களை ஈர்ப்பது தான். இத்துறை நிறுவனங்கள் பெரும்பாலம் பெரிய நகரங்களுக்கு வருவதை விரும்பும் காரணத்தால் பெரிய கார்ப்ரேட் வளாகத்தை உருவாக்க FSI-யில் முக்கிய மாற்றங்களை செய்யவும் முடிவு செய்து முக்கிய பதிவை டிவிட்டரில் செய்துள்ளார்.

 கீர்த்தனா குறிவைத்த 3 இடம்.. சென்னையின் அடுத்தக்கட்ட வளர்ச்சி இந்த ஏரியாவுல தான்!

தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறை Global Capability Centres (GCCs) அலுவலகங்களை அதிகளவில் கொண்டு வருவதற்கும், இப்பிரிவு நிறுவனங்களுக்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கிட 3 முக்கிய பகுதிகளை மையமாகக் கொண்டு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Also Read

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, OMR - ராஜீவ் காந்தி சாலை ஆகிய 3 வழித்தடங்களில் GCC நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை GCC development plan கீழ் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் முக்கியமாக தகுதியுள்ள GCC கேம்பஸ்களுக்கு அதிகப்படியான FSI வழங்கும் திட்டமும் உள்ளதாக தெரிவித்துள்ளார் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா.

அதிக FSI வழங்கப்பட்டால், ஏற்கனவே உள்ள நிலப்பரப்பிலேயே நிறுவனங்கள் கூடுதல் அலுவலக இடத்தை உருவாக்க முடியும், அதாவது கூடுதல் தளங்களை கட்ட முடியும். இதன் மூலம் உலகளாவிய ஜிசிசி நிறுவனங்கள் தங்களுடைய இந்திய ஆப்ரேஷன்ஸ், டெக் ஹாப்களை சென்னையில் பெரிய அளவில் ஓரே இடத்தில் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

OMR ஏற்கனவே சென்னையின் முக்கிய IT மற்றும் அலுவலக பகுதியாக உள்ளது. இதேபோல் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை விமான நிலையம் மற்றும் OMR பகுதிகளை இணைக்கிறது. மவுண்ட்-பூந்தமல்லி சாலையும் போரூர், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் போன்ர வேகமாக வளர்ந்து வரும் அலுவலக பகுதிகளையும் இணைக்கும் காரணத்தால் இப்பகுதியில் புதிதாக அமைக்கப்படும் ஜிசிசி அலுவலகங்களுக்கு அதிக FSI அளிக்க தமிழ்நாடு அரசு GCC development plan கீழ் முன்வருவதாக கீர்த்தனா தனது டிவிட்டர் பதிவு வாயிலாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த 3 பகுதிகளும் ஏற்கனவே ஒரு ஐடி காரிடார் ஆக இருக்கும் வேளையில் FSI உயர்த்துவது மூலம் புதிதாக வரும் நிறுவனங்களுக்கு இது பலன் அளிக்கும் என கீர்த்தனா தலைமையிலான தொழிற்துறை அமைச்சகம் நம்புகிறது.

இந்த விரிவாக்கம் இப்பகுதியை கூடுதல் நெரிசல் நிறைந்த பகுதியாக மாற்றும் என்பதால் இதற்கான போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த வேண்டியது கட்டயமாகியுள்ளது.

சென்னையில் FSI அளவை அதிகரிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் வேளையில் தொழிற்துறை, GCC அலுவலகங்களுக்கு மட்டும் இத்தளர்வை கொண்டு வருவது வரவேற்கதக்கதாக உள்ளது. மேலும் FSI அளவு எந்தளவுக்கு உயரும் என்பதும் குறித்து அமைச்சர் கீர்த்தனா தெரிவிக்கவில்லை, எனவே இதுக்குறித்த தெளிவும், விளக்கமும் இனி வரும் காலத்தில் தான் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+