தமிழ்நாட்டுக்கு புதிய முதலீட்டை ஈர்க்கும் பொருட்டு தொழிற்துறை அமைச்சர் TRB ராஜா தலைமையிலான குழு ஜெர்மனிக்கு சென்றுள்ளதை தொடர்ந்து, டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் அமைச்சர் இரு முக்கிய பதிவை செய்துள்ளார்.
முதல் பதிவில்: தமிழ்நாடு மற்றும் ஜெர்மனியின் சாக்சனி (Saxony ) மாநிலத்திற்கு இடையிலான வர்த்தக உறவு வலுப்பட உள்ளது. சாக்சனி மாநிலம் சென்னையில் தனது மாநிலத்திற்கான பிரதிநிதிகளை நியமிக்க உள்ளது. இதன் மூலம் சாக்சனியின் நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைவதற்கும், ஏற்றுமதி ஆதரவு பெறுவதற்கும் வசதியாக இருக்கும் என அமைச்சர் TRB ராஜா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகம் வர்த்தகத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். சென்னை மற்றும் கோவை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சாக்சனியின் மாநிலம் தனிப்பட்ட முதலீட்டை செய்யும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் வலுவான இருதரப்பு உறவுக்கான களம் அமைக்கப்படுகிறது. சாக்சனியை வேலை மற்றும் முதலீட்டிற்கான இலக்காக ஊக்குவிப்பதிலும், அவர்களின் முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என அமைச்சர் TRB ராஜா தெரிவித்தார்.
சமீபத்தில் சாக்சனியின் Dresden-க்கு மேற்கொண்ட பயணத்தின் போது, பொருளாதார விவகார அமைச்சர் மார்ட்டின் டூலிக் மற்றும் பிற அதிகாரிகளுடன் தமிழ்நாடு-சாக்சனி இடையேயான ஒத்துழைப்பை ஆய்வு செய்வதற்கான வழிகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
2025 இல் சாக்சனி பிரதிநிதிகளை தமிழ்நாட்டிற்கு வரவேற்கவும், அவர்களின் சென்னையில் புதிய அலுவலகத்தை இணைந்து திறக்கவும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றும் அமைச்சர் TRB ராஜா தெரிவித்தார்.
2வது பதிவு: தமிழ்நாட்டின் விமான மற்றும் பாதுகாப்பு துறையின் மகத்தான திறனை உலகளவில் பறைசாற்றும் வகையில், Aeromart Toulouse 2024 இல் TIDCO மற்றும் AIDAT உடன் இணைந்து தமிழ்நாட்டை இக்கூட்டத்தில் அமைச்சர் TRB ராஜா தலைமையிலான குழு முன்நிறுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில், தமிழ்நாட்டின் விமான மற்றும் பாதுகாப்பு துறை பல மடங்கு வளர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தமிழ்நாட்டை உலகளாவிய அளவில் முக்கிய ஹப் ஆக மாற்றும் முயற்சியில் உள்ளது என அமைச்சர் TRB ராஜா தனது பதிவில் தெரிவித்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications