முதல் முறையாகத் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 33 மாதங்கள் முழுமையாக முடிந்துள்ளது, இந்த 33 மாதங்களுக்கான முதலீட்டு, வர்த்தகப் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்ட் எப்படி இருக்குன்னு தெரியுமா..? நீங்களே பார்த்து பாஸா..? பெயிலா..? சொல்லுங்க.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 33 மாதத்தில் 8.65 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது தமிழ்நாட்டில் வர்த்தகம் செய்ய முதலீட்டு ஆர்வத்தைத் தெரிவிக்கும் ஒரு நடைமுறையாகும்.

இந்த 8.65 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பட்டதாரிகளுக்குப் போதுமான வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய முடியும்.
இதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்களில் சுமார் 44 திட்டங்களுக்கு அரசு அடிக்கல் நாட்டியுள்ளது, மூலம் உற்பத்தி கட்டமைப்புகளின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இதேபோல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதில் சுமார் 27 ஒப்பந்தங்கள் மூலம் 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜனவரி மாத துவக்கத்தில் தமிழ்நாடு அரசு மிகவும் பிரம்மாண்டமான முறையில், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. 2வது நாள் கூட்ட முடிவில் மொத்தம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த முதலீடுகள் மூலம் 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், மறைமுக வேலைவாய்ப்புகளையும் சேர்த்து மொத்தமாக, 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த முதலீடுகளும் 33 மாத ரிப்போர்ட் கார்டில் அடங்கும்.
இதோடு 2023-24 நிதியாண்டின் முதல் 6 மாதம் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தின் மொத்த ஏற்றுமதி 24.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது.
இதன் வாயிலாக இந்த 6 மாத காலகட்டத்தில் இந்தியாவிலேயே 3வது பெரிய ஏற்றுமதி மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. முதல் இடத்தை குஜராத்தும், 2வது இடத்தையும் மகாராஷ்டிரா மாநிலமும் பிடித்திருக்கும் வேளையில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து அதிக மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் பொறியியல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஜவுளிகளின் ஆயத்த ஆடைகள், பருத்தி நூல், கைத்தறி பொருட்கள், தோல் மற்றும் தோல் பொருட்கள் டாப் 5 இடத்தை பிடித்துள்ளது.
2023-24 நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்த இந்தியாவும் சுமார் 244.89 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பங்கீடு மட்டுமே 10 சதவீதம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications