இந்தியாவின் மொத்த தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 48 சதவீத பங்கீட்டை வகிக்கிறது. இதேபோல் இந்தியாவின் மொத்த காலணி தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 32 சதவீதம் பங்குவகிக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தோல் அல்லாது காலணி தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க முடிவு செய்து, முதல் வெற்றியாக Crocs பிராண்ட் காலணிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பீனிக்ஸ் கோதாரி குரூப் மற்றும் தைவான் நாட்டின் ஷூடவுன் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியது.

இதன் நீட்சியாகத் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் கட்டத்தில் 4 வெளிநாட்டுத் தோல் அல்லாத காலணிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டப்பட்டுத் தனது முதலீட்டைத் துவங்கியுள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த Pou Chen (High Glory) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,302 கோடி ரூபாய் முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை கிடைக்கும்
தைவானைச் சேர்ந்த மற்றொரு காலணி உற்பத்தி நிறுவனமான ஹாங் ஃபூ குழுமம் ராணிப்பேட்டையில் கூடுதலாக 125 மில்லியன் டாலரைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளது. இந்த நிறுவனம் கான்வர்ஸ், நைக் போன்ற பிராண்டுகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ-க்களைத் தயாரிக்கிறது. நிறுவனம் 200 மில்லியன் டாலர் கூடுதல் முதலீட்டைச் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபெங் டே விழுப்புரம் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் காலணிகளை உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 6000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
சிங்கப்பூரைச் சேர்ந்த ஜாங் பு பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.48 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications