தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசு சர்வதேச முதலீட்டாளர்கள் முன்னிலையில் தமிழக அரசு செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கையை வெளியிட்ட உள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறைக்கு மிகவும் முக்கியமானதாகச் செமிகண்டக்டர் துறை உள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் இப்போது தான் அடியெடுத்து வைத்துள்ளது, சிலிக்கான் ஃபேரிகேஷன், செமிகண்டக்டர் OSAT, சிப் டிசைனிங் எனப் பல துறையில் வாய்ப்புகள் இருக்கும் வேளையில், இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தமிழக அரசு செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கையை வெளியிட்டு பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு இந்தச் செமிகண்டக்டர் கொள்கையை முன்பே வெளியிட்டு இருக்கலாம், ஆனால் 30 நாடுகளின் சர்வதேச முதலீட்டாளர்களை நேரடியாகச் சந்திக்கும் வேளையில் இக்கொள்கையை வெளியிடுவதன் மூலம் சிறப்பான பார்வையைப் பெறும். இந்த 30 நாடுகள் அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்யத் திட்டமிட்டால் கட்டாயம் தமிழ்நாடு ஆப்ஷனாக இருக்க இந்தக் கூட்டத்தில் வெளியிடப்பட்டு உள்ள செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கை பயன்படும்.
இது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரிய ஈர்ப்பு சக்தியாக இன்று வெளியிட்டுள்ள செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கை விளங்கும். இதில் முக்கியமான அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் விரைவாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் கொள்கை வெளியிட்ட இதேவேளையில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் பாதை என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இவ்விரு அறிக்கையும் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இணைந்து வெளியிட்டனர்.
தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவங்கி நாளை வரையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தின் முக்கிய இலக்கே வளர்ச்சி வாய்ப்புகளைச் சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சியை விநியோகிக்கப்பட வேண்டும் என்பது தான்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications