தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி அமைப்பு போட்டி தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கிறது. அந்த வகையில் உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், தணிக்கை ஆய்வாளர் உட்பட மொத்தம் 828 குரூப் 2ஏ பதவிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
இது தொடர்பான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே நிறைவடைந்து விட்டது. இதில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இந்நிலையில் குரூப் 2 பதவிகளில் 1126 பேரும் குரூப் 2a பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்கள் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதனை தொடர்ந்து இவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று நடைபெற இருந்தது.

தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேவர்களுக்கு ஹால் டிக்கெட் உள்ளிட்டவையும் அனுப்பி வைக்கப்பட்டன. வெளியூர்களில் இருந்து எல்லாம் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு நேரத்திற்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் சென்னையில் தேர்வு மையத்தில் நடந்த குளறுபடி காரணமாக ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதுமே திடீரென குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கான பதிவெண் இல்லாததால் பலரும் குழப்பம் அடைந்தனர். இதனை அடுத்து நந்தனம் தேர்வு மையத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில் அங்கு செல்வதற்குள் நேரம் ஆகிவிடும் எங்களால் தேர்வினை எழுத முடியாது எனக் கூறி தேர்வர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சென்னை மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதுமே இன்று நடைபெற இருந்த குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஆயிரக்கணக்கான தேர்வுகளுக்கு மிகப் பெரிய குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏராளமானவர்கள் கடைசி நேரத்தில் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
ஏனெனில் பலரும் வெளியூர்களிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வில் பங்கேற்பதற்காக வருகை தந்தவர்கள். இந்த சூழலில் தேர்வாணைய கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ், மீண்டும் எந்த தேதியில் குரூப் 2 மற்றும் குரூப் 2a முதன்மை தேர்வுகள் நடத்தப்படும் என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
இது தொடர்பான அறிக்கையில் இன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான பிரதான தேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மூன்று மையங்களில் நடத்த இயலவில்லை என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த இரண்டு தேர்வுகளும் தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்பட உள்ளது என கூறியிருக்கிறார்.
தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாகவே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால் டிக்கெட் விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என சுட்டிக்காட்டி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வரும் 22ஆம் தேதி முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி 2 , பொது அறிவு தேர்வு தாள் 2 அன்றைய தினமே நடத்தப்படும். அந்த தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து ஹால் டிக்கெட் 13ஆம் தேதி அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளார்.
எனவே தேர்வர்கள் ஏற்கனவே ஹால்டிக்கெட் பெற்றிருந்தாலும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்து கொள்வது நல்லது. அதே வேளையில் இன்று தேர்வு ரத்தானவர்களுக்கு எல்லாம் தேர்வுக்கு தயாராக் கூடுதலாக நாட்கள் கிடைத்துள்ளன என்பதால் அவற்றை பயன்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications