2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் மிகவும் முக்கியமான கனவாக இருக்கிறது.
இந்த நிலையில், இதை அடைய முதலில் அனைத்து விதமான புகையிலை பொருட்கள் மீதும் அதிகப்படியான வரி விதிக்கப்பட்டு, இதன் விற்பனை மற்றும் நுகர்வில் கடுமையான விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் எனக் கருத்து நிலவுகிறது.
புகையிலை பொருட்கள் மீதான கடுமையான வரி விதிப்பது மூலம் இதன் விற்பனை குறைந்து மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வழி வகுக்கும்.
ஹெல்த்கேர் சேவை
இந்தியாவில் மக்களும், அரசும் ஹெல்த்கேர் சேவைக்காக ஜிடிபி அளவில் சுமார் 1.04 சதவீத தொகையைச் செலவு செய்கின்றனர். இது மட்டும் அல்லாமல் அதிகப்படியான மருத்துவச் செலவுகள் மக்களை வறுமையில் தள்ளுகிறது என லக்னோ பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவரான அரவிந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
வரி உயர்வு
இதன் மூலம் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் புகையிலை பொருட்கள் மீது கட்டாயம் வரியை உயர்த்த வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளார் அரவிந்த் மோகன்.
உலக வங்கி
உலகச் சுகாதார அமைப்பு, உலக வங்கி போன்ற பல சர்வதேச அமைப்புகள் புகையிலை பொருட்கள் மீதான அதிகப்படியான வரி விதிப்பது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கியக் கருவியாகப் பயன்படும். மேலும் மக்கள் மத்தியில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதில் தலையாய நடவடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளது.
மருத்துவச் செலவுகள்
இந்திய மக்களுக்கு மருத்துவச் சேவைக்கான செலவுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது, மொத்த செலவில் மக்கள் 70 சதவீத தொகையும், அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் மானியம், வரிச் சலுகை, இலவச சிகிச்சை மூலம் 25-30 சதவீத செலவுகளை ஏற்கிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு
2017ஆம் ஆண்டி ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கம் செய்யப்பட்ட போது நாட்டின் பொருளாதாரம் 2 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை, இதற்கு முக்கியக் காரணம் Sin products பட்டியலில் இருக்கும் புகையிலை போன்ற பொருட்களுக்கு எவ்விதமான வரியையும் அதிகரிக்கவில்லை என்பது முக்கியக் காரணமாக உள்ளது என டெல்லியில் உள்ள தேசிய பொது நிதி மற்றும் கொள்கை (NIPFP) அமைப்பின் உறுப்பினர் டாக்டர் பிரீதம் தத்தா மற்றும் பொருளாதார நிபுணர் மற்றும் பொதுச் சுகாதாரக் கொள்கை ஆய்வாளர் ரிஜோ எம் ஜான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புகையிலை வரி விதிப்பு
இந்தியாவில் தற்போதைய நடைமுறையில் இருக்கும் வரி விதிப்புகள் அடிப்படையில் பீடி மீது 22% வரியும், சிகரெட் மீது 53% வரியும் மற்றும் புகையில்லா புகையிலைக்கு (smokeless tobacco) 64% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. இந்தியா புகையிலை பொருட்கள் மீது 75 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று WHO இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஒற்றைச் சிகரெட் விற்பனை தடை
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 லட்சம் பேர் சிகரெட் புகைப்பதால் மரணம் அடைகின்றனர். சமீபத்தில் நாடாளுமன்றத்தின் நிலைக்குழு புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை இந்தியாவில் கட்டுப்படுத்த ஒற்றைச் சிகரெட் விற்பனையைத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது எனப் பல தரப்புகள் கூறி வருகிறது.


Click it and Unblock the Notifications