குருகிராம்: இந்திய பெருநகரங்களில் டிராபிக் பிரச்சனை பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பெங்களூரு , குரு கிராம் உள்ளிட்ட நகரங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வேலை வாய்ப்பு தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கேற்ற உள்கட்டமைப்புகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை.
தினமும் பீக் அவர்களில் நகரங்களில் போக்குவரத்து நெரிசலை கடந்து வேலைக்கு செல்வது பெரும்பாடாக இருக்கிறது. ஒரு நாளில் சில மணி நேரங்கள் சாலையில் டிராப்பிக்கில் சிக்கி இருப்பதிலேயே சென்று விடுகிறது. அதுவும் மழை காலம் வந்துவிட்டால் வாகனங்களில் செல்வதற்கு பதில் நடந்தே சென்று விடலாம் என தோன்றும்.

இப்படி போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும் போது சிலர் செய்யக்கூடிய செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுவிடுகிறது. டிராப்பிக்கில் இருந்து அலுவலக மீட்டிங்கில் கலந்து கொள்வது, படிப்பது போன்ற வீடியோக்களும் புகைப்படங்களும் நெட்டிசன்களால் பகிரப்படுவது உண்டு. அப்படி டெல்லி அருகே இருக்கும் குருகிராம் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு வாகன ஓட்டி செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக ஆர்யான்ஷ் என்ற பயனர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் குருகிராம் பகுதியில் டிராபிக்கில் இருந்து தப்பிப்பதற்காக தன்னுடைய பைக்கை தோளில் சுமந்து சென்ற நபர் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது .
In Gurgaon, a man carried his scooter on his shoulder to avoid traffic 😭 pic.twitter.com/HQdXpQ6leC
— Aaraynsh (@aaraynsh) September 3, 2025
சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதையும் இரண்டு பேர் அந்த வண்டியை தூக்கிக் கொண்டு நடந்து செல்வதும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது . வாகன ஓட்டிகள் அனைவரும் இவர்களின் செயலை ஆச்சரியத்துடன் பார்ப்பதும் அதில் காணமுடிகிறது .
குருகிராம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து பதிவு செய்திருக்கிறார் . நீண்ட நேரம் டிராபிக் ஜாமில் காத்திருந்த அந்த இளைஞர் கடுப்பாகி இருசக்கர வாகனத்தை கையில் தூக்கிச் சென்றதாக குறிப்பிட்டு இருக்கிறா. அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது .
குருகுராமில் புதிதாக ஒரு பாகுபலி வந்து விட்டார் என ஒரு பயனர் கூறி இருக்கிறார். ஒரு பயனர் இனி இந்தியாவில் நகரங்களில் வசிப்பவர்கள் இப்படி தான் சாலைகளில் செல்ல போகிறார்கள், தங்களுடைய கார் பைக் உள்ளிட்டவற்றை தூக்கிச் செல்லும் அளவிற்கு அனைவரும் உடம்பை வலுவாக வைத்துக் கொள்ளுங்கள் என கிண்டலாக பதிவு செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications