நீங்கள் உங்களது உணவு டெலிவரிகளை பணம் கொடுத்து வாங்க நினைத்தால் உங்களிடம் அதற்கான சரியான தொகை இல்லாமல் போகலாம். ரவுண்டாக பணம் தந்தால் அதற்கு பாக்கி சில்லரை டெலிவரி பாயிடம் இல்லாமல் போகலாம். இதனால் நீங்கள் மீண்டும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த நேரிடும். இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக சோமாட்டோ இப்போது புதியதொரு கேஷ் ஆன் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சலுகை பற்றி சோமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் அளித்துள்ளார். அதில் கேஸ் ஆன் டெலிவரி சில சமயங்களில் சிரமமாக ஆகி விடலாம். இதனால் வாடிக்கையாளர்கள் இனி டெலிவரி பாய்களிடம் பணத்தை தரலாம். பாக்கி பணம் இல்லாவிட்டால் அந்தப் பணம் இனி அவர்களது கணக்கில் வரவு செய்யப்படும். அடுத்தடுத்த உணவு டெலிவரி ஆர்டர்களுக்கு அந்தப் பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சலுகை பிக்பாஸ்கெட்டின் சேவையில் உள்ளதால் சோமாட்டோவும் செயல்படுத்துகிறது. இப்படி ஒரு வழியை வகுத்ததற்கு பிக்பாஸ்கெட்டுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எடுத்துக்காட்டாக ஒரு வாடிக்கையாளர் 530 ரூபாய்க்கு ஆர்டர் செய்துவிட்டு ரூ.600 தந்தால் பாக்கி ரூ.70 அவரது சோமாட்டோ அக்கவுன்ட்டில் வரவு செய்யப்படும் எனவும் விளக்கியுள்ளார்.
இந்த பதிவுக்கு எக்ஸில் நிறைய வரவேற்பு குவிந்து வருகின்றது. ரொம்ப எளிமையான அருமையான வசதி இது. அடுத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு வெளிப்படையாகச் சொல்வது பாராட்டுக்குரியது என்று ஒரு பதிவர் கூறியுள்ளார்.
மற்றொருவர் கேஷ் ஆன் டெலிவரி வசதியை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும். இப்போது அதில் பாதி வேலை முடிந்து விட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். தனது போட்டியாளரின் சிந்தனையை பாராட்டுவது சிறப்பான விஷயமாகும். இந்த ஐடியாவை பின்பற்றுவது அதைவிட சிறப்பு என வேறு ஒருவர் பாராட்டியுள்ளார்.
அடுத்ததாக, சோமாட்டோ வேலட் பயன்பாட்டை அதன் வெப்சைட்டிலும் பிற ஆப்பிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருவர் வலியுறுத்தியுள்ளார். சோமாட்டோவும் ஸ்விக்கியும் இந்தியாவில் உணவு டெலிவரி துறையில் முன்னணியில் உள்ளன. தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை தருவதற்காக பல்வேறு சலுகைகளையும் நடைமுறைகளையும் அளித்து வருகின்றன.
இந்த புதிய கேஷ் ஆன் டெலிவரியை சோமாட்டோ அறிமுகப்படுத்தியதை வாடிக்கையாளர்கள் வரவேற்றுள்ளனர். பலசரக்கு டெலிவரி செய்யும் பிக்பாஸ்கெட் நிறுவனம் பின்பற்றி வரும் கேஷ் ஆன் டெலிவரி சேவையை சோமாட்டோவும் பின்பற்றும் என அதன் சிஇஓ தீபிந்தர் கோயல் அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த கேஷ் ஆன் டெலிவரிக்குக் கூடுதலாக எந்தக் கட்டணத்தையும் சோமாட்டோ அறிவிக்கவில்லை.
Written by: Jayachandran
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications