ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ அரசு, அந்நாட்டில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை சரி செய்ய புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாகி வரும் வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற கொள்கையை மனித உழைப்பை அதிகம் நம்பும் ஜப்பான் நாட்டில் முதல் மாகாணமாக டோக்கியோ-வில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுக்குறித்து டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே இதுக்குறித்து கூறுகையிஸ், ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் விடுமுறையுடன் சுருக்கப்பட்ட வேலை நாட்களை தேர்வு செய்யலாம் என்று அறிவித்தார்.

இந்த புதுமையான அணுகுமுறை வேலை-வாழ்க்கை சமநிலையை அதிகரித்து, திருமணமானவர்கள் மத்தியில் குழந்தை பெற ஊக்குவிக்கும் நோக்கம் அதிகரிக்கும். ஜப்பானின் கருவுறுதல் விகிதம் மக்கள் தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1 விகிதத்தை விட குறைவாக 1.2 குழந்தைகள் என அதிர்ச்சியூட்டும் அளவுக்கு குறைந்துள்ளது.
இதை சமாளிக்க ஜப்பான் அரசு நாடு தழுவிய அளவில் மக்களை குடும்பத்தை விரிவாக்கம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது, ஆனால் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சரி செய்ய முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. இதனிடையில் தான் டோக்கியோ அரசு வாரம் 3 நாள் விடுமுறையை அறிமுகம் செய்துள்ளது.
டோக்கியோ கவர்னர் கோய்கேவின் புதிய விடுமுறை கொள்கையில் தொடக்கப் பள்ளியில் ஊழியர்களின் குழந்தைகள் படித்தால், பெற்றோர்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் ஏற்பாடு செய்துக்கொடுக்க ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கட்டளையிட்டு உள்ளது. இந்த நடவடிக்கை பெற்றோருக்கு தங்கள் வேலை நேரத்தை குறைத்து, அதே நேரத்தில் விகித அடிப்படையில் சம்பளத்தை பராமரிக்க அனுமதிக்கிறது.
குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்ளும் ஜப்பான் அரசாங்கத்தின் முயற்சிகள் மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஜப்பான் நாடு மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகள் வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் தொழிலாளர் படையுடன் போராடி வருகிறது. ஜப்பான் செயல்முறை பல நாடுகளுக்கு பாடமாக இருக்கப்போகிறது.
கடந்த ஆண்டு ஜப்பானில் வெறும் 727,277 குழந்தைகள் பிறந்ததாக அந்நாட்டு சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த குறைந்த எண்ணிக்கை நாட்டின் அதிகப்படியான வேலை நேர கலாச்சாரத்தால் ஏற்பட்டு இருக்கலாம் என்ற நிலைபாடு தான் இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக உள்ளது. இந்த 3 நாள் விடுமுறை 2025 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications