ஜப்பானில் 2 பாண்டா குட்டி பிறந்துள்ளதால் ஹோட்டல் பங்குகள் தடாலடி வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பான் நாட்டில் ஒரு பக்கம் ஒலிம்பிக் போட்டிகளைக் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும் என அந்நாட்டு அரசு போராடி வருகிறது.

 

இதற்கு முக்கியக் காரணம் ஒலிம்பிக் போட்டிகளுக்காக அதிகளவிலான தொகையை முதலீடு செய்து செய்துள்ளது ஜப்பான் அரசு.

பாண்டா குட்டிகள்

பாண்டா குட்டிகள்

இப்படிப் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஜப்பான் நாட்டின் மிகவும் பிரபலமான ஏனோ உயிரியல் பூங்காவில் புதிதாக இரண்டு பாண்டா குட்டிகள் பிறந்துள்ளது.

இந்தச் செய்தி காட்டுத்தீ போல் ஜப்பான் முழுவதும் பரவியுள்ள நிலையில் இரண்டு உணவகங்கள் பங்குகள் ஜப்பான் பங்குச்சந்தையில் பெரியளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது.

ஹோட்டல் பங்குகள் உயர்வு

ஹோட்டல் பங்குகள் உயர்வு

புதன்கிழமை காலையில் ஏனோ உயிரியல் பூங்கா நிர்வாகம் 2 பாண்டா குட்டி பிறந்துள்ள செய்தியை வெளியிட்ட நிலையில், டோக்கியோவைத் தலைமையிடமாகக் கொண்டு ஜப்பான் முழுவதும் இயங்கி வரும் Totenko உணவக பங்குகள் 10 சதவீதமும், Seiyoken KK என்னும் உணவக நிறுவனத்தின் பங்குகள் 7.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

என்ன காரணம்.?!
 

என்ன காரணம்.?!

பாண்டா குட்டிகள் பிறந்துள்ளதற்கும் ஹோட்டல் பங்குகள் வளர்ச்சி அடைந்துள்ளதற்கும் என்ன காரணம் தெரியுமா..?! ஜப்பான் நாட்டில் பாண்டா கரடிகள் என்பதும் மிகவும் பிடித்தமான விலங்காக உள்ளது. இதிலும் குட்டி பாண்டா என்பதால் ஏனோ உயிரியல் பூங்காவிற்குப் பார்வையிட வரும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும்.

ஏனோ உயிரியல் பூங்கா

ஏனோ உயிரியல் பூங்கா

இதன் மூலம் ஏனோ உயிரியல் பூங்கா அருகில் இருக்கும் உணவகங்களின் வர்த்தகம் பெரிய அளவில் அதிகரிக்கும். இப்படியிருக்கும் சூழ்நிலையில்ல தான் Totenko மற்றும் Seiyoken KK ஆகிய நிறுவனப் பங்குகள் தாறுமாறாக அதிகரித்துள்ளது.

2000 பேர் மட்டுமே அனுமதி

2000 பேர் மட்டுமே அனுமதி

தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் ஏனோ உயிரியல் பூங்காவிற்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஏனோ உயிரியல் பூங்காவில் முன்பதிவு முறையில் தினமும் 2000 பேரை மட்டும் அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: japan ஜப்பான்
English summary

Tokyo restaurants' shares jump on birth of twin pandas in Ueno zoo

Tokyo restaurants' shares jump on birth of twin pandas in Ueno zoo
Story first published: Wednesday, June 23, 2021, 19:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X