இந்திய நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டதோடு, டோல் பிளாசாவில் அனைத்து வழித்தடமும் பாஸ்டேக் வழித்தடமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக நாளுக்கு நாள் டோல் பிளாசாவில் வசூல் அளவு அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் டோல் பிளாசா மூலம் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த நெடுஞ்சாலைத் துறை இந்த வாரம் முழுவதும் சராசரியாகத் தினமும் 100 கோடி ரூபாய் அளவில் கட்டணத்தைப் பாஸ்டேக் மூலம் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் 25ஆம் தேதி அதிகப்படியாக 64.5 லட்ச பரிமாற்றங்கள் மூலம் 103.94 கோடி ரூபாய் அளவிலான தொகை வசூல் செய்யப்பட்டுப் புதிய சாதனை படைத்துள்ளது நெடுஞ்சாலைத் துறை. பாஸ்டேக் பரிமாற்ற முறை நிலையான வேகத்தில் அமலாக்கம் செய்யப்பட்டு தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தப் பாஸ்டேக்முறை அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு எலக்ட்ரானிக் பரிமாற்ற அளவீடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் வசூல் அளவில் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் புதிய கட்டுப்பாடு அமலாக்கம் செய்யப்பட்ட 2 வாரத்தில் மட்டும் புதிதாகப் பாஸ்டேக் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் அதிகரித்து, மொத்தம் 2.8 கோடி பாஸ்டேக் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பாஸ்டேக் அமலாக்கம் செய்யப்பட்டது மூலம் டோல் பிளாசாவில் காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications