ஏப்ரல் 1 முதல் டோல் கட்டணம் உயர என்ன காரணம்? மக்களுக்கு என்ன பாதிப்பு? கட்டணம் உயராத 2 முக்கிய டோல் பிளாசா..!!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் 77 சுங்கச்சாவடிகளில் 66 இடங்களில் டோல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வு சுமார் 3% முதல் 7% வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த கட்டண உயர்வு?
இந்த சுங்கக் கட்டண திருத்தம் ஆண்டுதோறும் நடைபெறும் நடைமுறையின் ஒரு பகுதியாகும். இது நாட்டின் மொத்த விலை குறியீடு (Wholesale Price Index) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலம் நெடுஞ்சாலையின் பராமரிப்பு செலவுகள் மற்றும் பொருளாதார மாற்றங்களை கருத்தில் கொண்டு கட்டணங்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

டோல் கட்டணம் உயர என்ன காரணம்? மக்களுக்கு என்ன பாதிப்பு? கட்டணம் உயராத 2 முக்கிய டோல் பிளாசா..!!

முக்கிய சுங்கச்சாவடிகள்
இந்த கட்டண உயர்வு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள முக்கிய சாலைகளிலும் எதிரொலிக்கும். குறிப்பாக சூரப்பட்டு, வானகரம் (சென்னை பைபாஸ்), நல்லூர் (சென்னை-தடா), பரனூர் மற்றும் ஆத்தூர் (தாம்பரம்-செங்கல்பட்டு) போன்ற இடங்களில் பயணிக்கும் வாகனங்களுக்கு இந்த டோல் கட்டண உயர்வு மூலம் நேரடியாக பாதிப்பு ஏற்படும்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி, மதுரை, நான்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் புதிய கட்டணங்கள் அமலாகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 77 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், 60 சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் NHAI ஆண்டு அட்டவணைப்படி செப்டம்பர் 1ஆம் தேதி மாற்றப்பட உள்ளன.

கட்டணம் உயர்த்தப்படாத சுங்கச்சாவடிகள்
பெங்களூரு பைபாஸ் வழித்தடமான மதுரவாயல் - வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள நெமிலி மற்றும் சென்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படாது. இதற்கு காரணம், அங்கு ஆறு வழிச்சாலை பணிகள் இன்னும் முழுமையாக நிறைவேறாததால் கட்டண உயர்வு அமலாக்கம் செய்யப்படாது. இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் 2019 ஏப்ரல் 1 முதல் கட்டணங்கள் மாற்றமின்றி தொடர்ந்து வருகின்றன.

டோல் கட்டண வசூல்
2021 ஏப்ரல் 1 முதல் இந்த ஆண்டின் பிப்ரவரி 28 வரையிலான காலக்கட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழ்நாட்டில் மொத்தமாக ரூ.18,865.14 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடியில் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2022-23ஆம் ஆண்டில் ரூ.3,758.23 கோடியாக இருந்த சுங்க வருவாய், 2023-24ஆம் ஆண்டில் ரூ.4,157.96 கோடியாக உயர்ந்தது. மேலும், 2024-25ஆம் ஆண்டில் இது ரூ.4,300 கோடியாக அதிகரித்துள்ளது.

வாகனங்களுக்கான கட்டண மாற்றம்
புதிய திருத்தத்தின் படி, கார்கள் மற்றும் ஜீப்புகளுக்கு ஒரு டோல் பிளாசாவில் சுமார் ரூ.5 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதே நேரத்தில், லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்களுக்கு ரூ.15 முதல் ரூ.40 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

FASTag ஆண்டு பாஸ் கட்டணமும் உயர்வு
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் FASTag வருடாந்திர பாஸ் கட்டணத்தையும் திருத்தியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான இந்த வருடாந்திர பாஸ், அடிக்கடி பயணம் செய்யும் தனியார் வாகனங்களுக்கு உதவியாக இருந்தது. இப்போது இந்த கட்டணமும் ரூ.3,000 இலிருந்து ரூ.3,075 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றமும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

பொதுமக்களுக்கு விளைவு
இந்த சுங்கக் கட்டண உயர்வு, தினசரி பயணச் செலவுகளை அதிகரிக்கும். குறிப்பாக அலுவலகப் பயணம், சரக்கு போக்குவரத்து மற்றும் நீண்ட தூர பயணங்களில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். டோல் கட்டண உயர்வு சிறிய அளவு போல தோன்றினாலும், தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்கு இது மாதாந்திர செலவில் கணிசமான மாற்றத்தை உருவாக்கும்.

டாக்சி சேவை பாதிப்பு
பொதுவாக டாக்சி சேவை பயன்படுத்துவோர் அவரச காலக்கட்டத்தில் தான் பயன்படுத்துவார்கள், ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம் அதிகரித்திருக்கும் வேளையில் டோல் கட்டண உயர்வு என்பது OutStation டாக்சி சேவை நிறுவனங்களுக்கு பெரும் தாக்கமாக இருக்கும்.

சரக்கு போக்குவரத்து
ஏற்கனவே பெட்ரோலியம் பொருட்கள் விலை உயர்வால் பேகேஜிங் செலவுகள் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோர் நிறுவனங்கள் விலை உயர்த்துவது, எடையை குறைத்து விலையை தக்க வைப்பது என பல்வேறு பணிகளை செய்து வரும் வேளையில் டோல் கட்டண உயர்வு மூலம் கூடுதல் சுமை உருவாகியுள்ளது. இதனால் பொருட்களின் விலை உயர்ந்து விற்பனை குறையலாம், விலை உயர்த்தாவிட்டால் நிறுவனங்களின் லாப அளவு குறையலாம்.

பயண செலவுகள்
தனியார் பஸ் கட்டணங்கள் ஏற்கனவே அதிகமாகி வரும் வேளையில், குறிப்பாக வார இறுதி நாட்களில் டிக்கெட் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த டோல் கட்டண உயர்வு பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை துறை கடைசியாக 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 36 சுங்கசாவடிகளில் கட்டணத்தை 8-10 சதவீதம் வரையிலான கட்டணத்தை உயர்த்தியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+