ஷாக்கிங்..!! பெங்களூருவில் ஜூலை 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு..!! எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு?

பெங்களூரு எலிவேட்டட் டோல்வே பிரைவேட் லிமிடெட் (BETPL) வெளியிட்ட அறிவிப்பின்படி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வரையிலான உயர்தர சுங்கச்சாவடியில் பயணிக்கும் பயணிகள் ஜூலை 1, 2025 முதல் அதிக கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.

ஷாக்கிங்..!! பெங்களூருவில் ஜூலை 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு..!! எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு?

யாருக்கு பாதிப்பு..?: எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வழியாக பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் உள்ள அட்டிபெலே வரை பயணிக்கும் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த கட்டண உயர்வு மார்ச் 31, 2025 நிலவரப்படி விலை குறியீட்டைக் (WPI) கொண்டு கணக்கீடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 30, 2026 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BETPL கூறுகையில், சாலையின் பராமரிப்பு, மேம்படுத்தும் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய கட்டண விவரங்களை முன்னதாகவே தெரிந்து கொண்டு திட்டமிட்டு பயணிக்கலாம். FASTag போன்ற வசதிகளை பயன்படுத்தி, சுங்கச்சாவடி செலவை எளிமையாக்கலாம். அடிக்கடி பயணிக்க வேண்டியவர்கள், மாதசந்தா பாஸ் மற்றும் விலக்கு வாய்ப்புகள் குறித்து விசாரிக்கலாம். இந்த அறிவிப்பு, தினசரி பணிக்கு செல்லும் மக்களிடம் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும் நிலையில், கட்டண உயர்வின் தேவையை அதிகாரிகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் நியாயப்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் ஜூலை 1, 2025 முதல், பெங்களூரு எலிவேட்டட் டோல்வே பிரைவேட் லிமிடெட் (BETPL) உயர்த்தப்பட்ட சுங்க கட்டணங்களை அமல்படுத்துகிறது. இதன் கீழ், இந்த சாலையை பயன்படுத்தும் பயணிகள் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு புதிய கட்டணங்களை செலுத்த வேண்டும்.

கார்கள், ஜீப்புகள், வேன்கள் : ஒரே பயணத்திற்கு - ரூ.65

ஒரே நாளில் பல பயணங்களுக்கு - ரூ.95
மாதாந்திர பாஸ் - ரூ.1,885

இருசக்கர வாகனங்கள் : ஒரு பயணத்திற்கு - ரூ.25

லாரிகள் மற்றும் பேருந்துகள் : ஒரு பயணத்திற்கு - ரூ.175
மாதாந்திர பாஸ் - ரூ.5,275

மல்டி-ஆக்சில் வாகனங்கள் (MAVs) :
ஒரு பயணத்திற்கு - ரூ.350
மாதாந்திர பாஸ் - ரூ.10,550

ஏன் இந்த உயர்வு..?: இதுகுறித்து BETPL தெரிவித்ததாவது; இந்த கட்டண உயர்வு, வழித்தட பராமரிப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக செய்யப்பட்டதாகவும், மார்ச் 31, 2025 வரை உள்ள விலை குறியீட்டை (WPI) அடிப்படையாக கொண்டு கணக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தினசரி பயணிகள், குறிப்பாக அலுவலகம், தொழில்நுட்ப பூங்கா, தொழிற்சாலைகள் செல்லும் மக்களுக்கு இந்த கட்டண உயர்வு சிறிது நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். எனவே, பயண திட்டங்களை முன்கூட்டியே அமைத்துக்கொள்ளலாம் மற்றும் மாதசந்தா பாஸ் போன்ற சலுகைகளை பயன்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது.

ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், பெங்களூரு உயர்தர சாலையை (Elevated Tollway) பயன்படுத்தும் லாரிகள், பேருந்துகள் மற்றும் மல்டி-ஆக்சில் வாகனங்களுக்கு புதிய சுங்கக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை மத்திய பட்டு வாரியம் முதல் அட்டிபெலே வரை செல்லும் சாலையை பராமரிக்கும் நிறுவனமான பெங்களூரு எலிவேட்டட் டோல்வே பிரைவேட் லிமிடெட் (BETPL) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஒரு பயணி கூறுகையில், "சேவை தடையின்றி இருக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் அதிக கட்டணம் செலுத்துவது வெறுப்பாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் என்பது தினசரி ஒரு சோதனையாகும், குறிப்பாக உச்ச நேரங்களில். விரைவான பயணங்களுக்கு இல்லையென்றால் நாம் எதற்கு விலை கொடுக்கப் போகிறோம்?" இந்த கருத்து, பயணிகளிடையே பரவி வரும் பொதுவான மனநிலையை பிரதிபலிக்கிறது.

அதாவது, சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படும் போதிலும், அந்த உயர்விற்கு ஏற்ப சேவை தரம் மற்றும் போக்குவரத்து நெரிசலில் மாற்றம் வரவில்லையென்றே அவர்கள் கோபம் தெரிவித்துள்ளனர். இந்தப் பின்னணியில், அதிகாரிகள் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+