சில காலமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற முக்கிய சமையல் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளின் விலை அதிகரித்ததாக அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது. வெஜ் மீல்ஸ் என்று சொல்லப்படுகிற சைவ தாலி தயாரிப்பதற்கான சராசரி செலவு டிசம்பர் மாதத்தில் 6 சதவீதம் அதிகரித்து தட்டு ஒன்றுக்கு 31.6 ரூபாயாக அதிகரித்துள்ளது.
2023-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 29.7 ரூபாயாக இருந்தது. அதேபோல நவம்பர் மாதத்திலும் 32.7 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று கிரிசில் நிறுவன அறிக்கை தெரிவித்திருக்கிறது.

ரொட்டி ரைஸ் ரேட் அறிக்கை என்ற ஒரு அறிக்கையை உருவாக்கி சாமானியர்களின் உணவுக்கான செலவுகளை கிரிசில் நிறுவனம் மதிப்பிடுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்த விவரங்களை கணக்கிட்டு அறிக்கையை வெளியிடும். அதை வைத்து நாம் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் அசைவ மத்திய உணவின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவித்திருக்கிறது. மாத அடிப்படையில் பார்க்கும்போது நவம்பர் மாதத்தோடு டிசம்பர் மாதம் 3% அதிகரித்து தட்டு ஒன்றுக்கு 63.3 ரூபாயாக உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. டிசம்பரில் தக்காளி விலை 24 சதவீதம் அதிகரித்து ஒரு கிலோ 47 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு விலை 50% அதிகரித்து ஒரு கிலோ 36 ரூபாயாகவும் இருந்தது. இறக்குமதி வரியை உயர்த்தியதன் காரணமாக எண்ணெய் விலையும் அதிகரித்தது.
ஆனால் எல்பிஜி சிலிண்டரின் விலை வீழ்ச்சி காரணமாக உணவின் விலை அதிகரிப்பு மேலும் குறைந்ததாக அறிக்கை கூறியுள்ளது. அசைவ தாலியை பொருத்தமட்டில், அசைவ உணவில் பெரும்பான்மையான பங்கு வகிக்கும் கறி கோழியின் விலை 20% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அசைவ உணவின் விலை ஏற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம்.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இருந்து புதிய வந்த புதிய வரத்துகளின் காரணமாக தக்காளி விலையில் 12 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. உணவின் விலையை 3 சதவீதம் குறைக்க தக்காளியின் விலை குறைவு உதவியதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது. அதோடு வெங்காயத்தின் விலை 12% வீழ்ச்சி அடைந்தது. உருளைக்கிழங்கின் விலை 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதுவும் உணவின் விலை குறைய உதவியுள்ளது.


Click it and Unblock the Notifications