தக்காளி விலை உயர்வு மக்களின் பர்ஸை ஓட்டையாக்கி வந்தாலும், சில விவசாயிகள் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான தொகையை சம்பாதித்து வருகின்றனர். விவசாயிகளின் சோகத்தை கேட்டு வந்த மக்களுக்கு சில விவசாயிகளின் மாபெரும் வருமானத்தை பார்க்கும் போது வியப்பு அளிக்கிறது.
இந்தியா முழுவதும் தக்காளிக்கான பற்றாக்குறை இருக்கும் வேளையில் தற்போது யாரிடம் தக்காளி இருந்தாலும் இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திய சில விவசாயிகள் வியக்க வைக்கும் அளவுக்கு பணத்தை சம்பாதித்துள்ளனர்.

புனே-வை சேர்ந்த விவசாயி ஒருவர் 17,000 தக்காளிப் பெட்டிகளை விற்றதன் மூலம் சுமார் 2.8 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும், இன்னும் 4000 பெட்டிகளை வைத்திருக்கும் வேளையில் தக்காளி மூலம் 3.5 கோடி ரூபாய் வரையிலான தொகையை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புனே அருகில் இருக்கும் ஜுன்னார் தாலுகாவைச் சேர்ந்த 36 வயதான ஈஸ்வர் கயாகர் என்ற விவசாயி இந்த 3.5 கோடி ரூபாய் வருமானம் குறித்து கூறுகையில், இது நான் ஒரே நாளில் சம்பாதித்தது இல்லை, கடந்த காலத்தில் அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளேன். இதற்கான பலனாகவும், இழப்பை சரி செய்யும் வாய்ப்பாகவும் தான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஈஸ்வர் கயாகர் மேலும் கூறுகையில் கடந்த 6 - 7 வருடங்களாக எனது 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு வருகிறேன், இதில் பலமுறை நஷ்டம் ஏற்பட்டாலும், நான் நம்பிக்கையை மட்டும் விடவில்லை. 2021ல் எனக்கு 18-20 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது, ஆனாலும் தக்காளி பயிரிடுவதை நான் நிறுத்தவில்லை என்று ANI-க்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தக்காளி பயிரிட்டு 2005 முதல் விவசாயம் செய்து வருகிறேன், தனது தந்தையிடம் இருந்து பொறுப்புகளை பெற்று அவருடைய வழிக்காட்டுதலின் பெயரில் விவசாயம் செய்து வருகிறார். 2017 முதல் தன்னுடைய மனைவியுடன் தனது 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த 3.5 கோடி ரூபாய் வருமான வாய்ப்புக்கு தன்னுடன் பண்ணையில் வேலை செய்த என் பெற்றோர், தாத்தா, பாட்டியின் ஆசிர்வாதம் மற்றும் எனது மனைவியின் கடின உழைப்பால் இந்த வெற்றி தனக்கு கிடைத்ததாக நம்புவதாக ஈஸ்வர் கயாகர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்,
இந்த வருடம் 12 ஏக்கர் நிலத்திலும் தக்காளி பயிரிட்டு வந்த நிலையில் இதுவரையில் சுமார் 17000 பெட்டிகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதில் ஒரு பெட்டி தக்காளியின் விலை 770 ரூபாயில் இருந்து 2311 ரூபாய் வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் தக்காளி வாயிலாக மட்டுமே 2.8 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளேன்.
தற்போது 3000 முதல் 4000 பெட்டிகள் அளவிலான தக்காளி இன்னும் ஸ்டாக் வைத்துள்ள நிலையில் மொத்த வருமானம் 3.5 கோடி என கணக்கு வைத்துகொள்ள முடியும். கடந்த சில நாட்களில் தக்காளி விலை கணிசமாக குறைந்தது, ஆனால் அதன் உச்சகட்டத்தில் ஒரு கிலோ 180 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications