தக்காளி விலை உயர்வு வீட்டு சமையல் அறை முதல் நாடாளுமன்றம் வரையில் விவாதிக்கும் முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கும் வேளையில் ஜூலை மாத பணவீக்கம் தரவுகள் இன்று வெளியாகியுள்ளது. அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த படியே தக்காளி, வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக ஜூலை மாதம் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என கணித்தது மட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டி இருக்கும் என அறிவித்திருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் ஜூன் மாதம் 4.81 சதவீதமாக இருந்த ரீடைல் பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரீடைல் பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் இல்லாத வகையில் மே 2022க்கு பின்பு ஜூலை மாதம் 7.44 சதவீதம் உயர்ந்துள்ளது, மே 2022 ஆம் ஆண்டில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் என்பது 7.79 சதவீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2023ல் நுகர்வோர் உணவு பணவீக்கம் என்பது 11.51 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஜூன் மாதம் 4.49 சதவீதமாக இது இருந்தது.
மேலும் ஜூலை மாதத்தில் கிராமபுற பணவீக்கம் 7.63 சதவீதமாகவும், நகரப்புற பணவீக்கம் 7.20 சதவீதமாகவும் உள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 6.40 சதவீதமாக உயரும் என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

பொதுவாக இந்திய ரிசர்வ் வங்கி தனது பணவீக்க அளவுகோள்-ஐ 2- 6 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது, அதாவது ரீடைல் பணவீக்கம் குறைந்தபட்சம் 2 சதவீதமும், அதிகப்படியாக 6 சதவீதத்தில் தக்க வைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த குறிப்பிட்ட அளவுக்குள் இருந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்க முடியும் கணக்கிட்டு உள்ளது.
இதுவே அமெரிக்காவில் பணவீக்க அளவை 2 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது, இப்படி ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம், ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பணவீக்க அளவுகளும், இலக்குகளும் மாறுப்படும்.


Click it and Unblock the Notifications