தக்காளி: இந்த விவசாய குடும்பத்தின் தலையெழுத்தே மாறிடுச்சு.. விலை உயர்வால் நடந்த அற்புதம்..!

இந்தியா முழுக்க தக்காளி விலை உயர்வு மக்களை புலம்பவிடுவது மட்டும் அல்லாமல் பலருடைய பர்ஸ்-ஐ காலி செய்துள்ளது, மேலும் பல குடும்பங்கள் தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நடைமுறைக்கு மாறியுள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினர் இண்டர்நெட்டில் தக்காளி இல்லாமல் டிபன், மதிய உணவு, டின்னர் செய்ய ரெசிபி தேடும் அளவுக்கு வந்துள்ளனர். ஆனால் இது அனைத்தும் நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே, மறுபக்கம் நடப்பது என்ன..?

தக்காளி விலை கிலோ 1 ரூபாய், 2 ரூபாய்க்கு எல்லாம் விற்பனை செய்திருப்பதை பார்த்துள்ள இந்திய மக்கள் கிலோ 160, 180 ரூபாய் என்றால் அதிர்ச்சி அடையாமல் என்ன செய்வார்கள். அரசின் தகவல் படி இந்தியாவில் தக்காளி விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 326.13% சதவீதம் அதிகரித்துள்ளது.

தக்காளி: இந்த விவசாய குடும்பத்தின் தலையெழுத்தே மாறிடுச்சு.. விலை உயர்வால் நடந்த அற்புதம்..!

இந்த திடீர் விலை உயர்வு மூலம் பல விவசாயிகள் அதிகப்படியான வருமானத்தை பார்த்துள்ளனர், ஒருபக்கம் அதிகப்படியான மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் ஒரு விவசாய குடும்பம் கடந்த ஒரு மாதத்தில் பதிவான தக்காளி விலை உயர்வால் பெரும் தொகையை சம்பாதித்துள்ளனர்.

இந்தியாவின் முக்கிய தக்காளி சப்ளையராக மாறியுள்ள கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியை சேர்ந்த ஒரு விவசாய குடும்பம் செவ்வாய்க்கிழமை 2000 பெட்டி தக்காளி விற்பனை செய்து 38 லட்சம் ரூபாய் வருமானத்தை ஒரே நாளில் பார்த்துள்ளது. இந்த ஒரு நாள் அவர்களுடைய வாழ்க்கையில் வருமா என்பதை அவர்களே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியை சேர்ந்த பிரபாகர் குப்தா மற்றும் அவரது சகோதரர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார்கள். கோலார் மாவட்டத்தில் உள்ள பெத்தமங்கலாவில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு பிரபாகர் குப்தா மற்றும் அவரது சகோதரர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

பிரபாகர் குப்தா இதுகுறித்து கூறுகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தக்காளிக்குக் கிடைத்த சிறந்த விலை 15 கிலோ கொண்ட ஒரு பெட்டிக்கு ரூ.800. செவ்வாய்க்கிழமை 15 கிலோ பெட்டிக்கு 1,900 பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2000 பெட்டி மூலம் 38 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை செவ்வாய்க்கிழமை விற்பனையில் பெற்றுள்ளார்.

15 கிலோ கொண்ட ஒரு பெட்டி 800 ரூபாய் எனில் ஒரு கிலோ தக்காளி 53.34 ரூபாய், தற்போது விற்பனை செய்யப்பட்டு உள்ள 1900 ரூபாய் எனில் 126.67 ரூபாய். ஆனால் ரீடைல் சந்தையில் 160 முதல் 180 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது, வியர்வை சிந்தி உழைச்ச விவசாயிகளுக்கு 126.67 ரூபாய் மட்டுமே கைமாற்றிவிடும் டீலர்களுக்கும், ரீடைல் கடைக்காரர்களுக்கும் 40 முதல் 60 ரூபாய் லாபமாக கிடைக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+