இந்தியாவில் தக்காளி விலை பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் வேளையில் மக்கள் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்பதைத் தீவிரமாகக் கடந்த சில வாரங்களாக யோசித்து வரும் வேளையில் இந்த அம்மா பொண்ணு டீம் வித்தியாசமாக யோசித்துள்ளனர்.
பொதுவாக இந்தியாவில் இருந்து பலர் தங்கம், ஐபோன், ஆடம்பர பொருட்களை வாங்குவதற்காகத் துபாய்க்குச் சென்று வாங்குவதோ அல்லது துபாயில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களிடம் வாங்கி வர சொல்வது வழக்கம். ஆனால் இங்கு இந்தியாவில் இருக்கும் ஒரு அம்மா-வுக்கு துபாயில் இருக்கும் மகள் சூட்கேஸ்-ல் தக்காளியை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்த டிவிட்டர் பதிவு பலருக்கும் சிரிப்பு மூட்டியுள்ளது என்றாலும் தக்காளி விலை உயர்வு எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது. தக்காளி விலை உயர்வு தொடர்பாகப் பல மீம் இணையத்தில் டிராண்டானது, பலர் பெட்ரோல், வெள்ளி விலையைத் தாண்டி விட்டது எப்போது தங்கம் விலையைத் தாண்டும் என்றெல்லாம் கிண்டல் அடித்தனர்.
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 20 ரூபாயில் இருந்து நாட்டின் சில பகுதிகளில் 250 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் 20 - 30 லட்சம் முதல் 3.5 கோடி ரூபாய் வரையில் இந்த விலைவாசி உயர்ந்த காலகட்டத்தில் சம்பாதித்துள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு விநோதமான ஐடியாக்கள் வந்துள்ளது.
டிவிட்டரில் Revs என்ற நபர் செய்த பதிவில் தன்னுடைய சகோதரி துபாயில் இருந்து கோடை விடுமுறைக்காக இந்தியா வருகிறாள், எனவே துபாயில் இருந்து என்ன வேண்டும் என குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கேட்டுக்கொண்டிருந்தாள். அம்மாவிடம் கேட்கும் போது 10 கிலோ தக்காளி வாங்கிட்டுவா என கூறியுள்ளார்.

எனவே என்னுடைய சகோதரி 10 கிலோ தக்காளியை பிளாஸ்டிக் டப்பா-வில் பேக் செய்து சூட்கேஸ்-ல் வைத்து துபாயில் இருந்து இந்தியா கொண்டு வந்துள்ளார் என REVS என்ற டிவிட்டர் கணக்காளர் தெரிவித்துள்ளார். இப்பதிவை இதுவரையில் சுமார் 52000 பேர் பார்த்துள்ளனர், இது மட்டும் அல்லாமல் பலர், பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

10 கிலோ தக்காளி வாங்கி என்ன பண்ணுவீங்க..? எப்படி ஸ்டோர் செய்வீங்க..? நானும் வாங்கி வைத்துள்ளேன் எல்லாம் கெட்டுப்போகிறது என Mx.Nix கேள்வி கேட்ட நிலையில் revs சிரித்துக்கொண்டே எங்களுடைய குடும்பத்தில் தக்காளியை அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய வழக்கம் உள்ளது தக்காளி ஊறுகாய், சட்னி போன்றவற்றுக்கு அதிகம் பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து யாராவது தக்காளி வாங்கிட்டு வருவார்களா என கேள்வி பலருக்கும் வரும். ஆனால் விலைவாசி உயர்வு மக்களைப் பல வகையில் மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை, இதற்கான ஒரு உதாரணம் தான் இந்த சம்பவம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications