இந்திய உணவில் தக்காளி இல்லாத உணவு வகைகள் குறைவு. ரசம் வைப்பதற்கு கூட தக்காளி தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் தென் மாநிலங்களில் நீடித்த மழையின் காரணமாக அக்டோபர் மாதம் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் நவம்பர் மாதம் இந்தியாவில் தக்காளியின் சராசரி விலை 22 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி நிலவரப்படி தக்காளி விலை கிலோவுக்கு ரூ.52.35 ரூபாய்க்கு விற்பனையானது. அக்டோபர் 14-ஆம் தேதி அன்று ரூ.67.50 ரூபாயாக இருந்தது என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் தொடர்ந்து சில்லறை பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்திற்கு அமைத்த வரம்பான 2 முதல் 6 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்த பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் உணவு பொருட்களின் விலை உயர்வு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் பருவமழையின் காரணமாக பயிர் விளைச்சல் கடுமையாக பாதித்திருந்தது. இதன் காரணமாக அப்போது பணவீக்கம் அதிகரித்து காய்கறிகளின் விலை உயர்ந்தது. அதேபோல இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும் பருவமழையின் தாக்கத்தால் பயிர்களின் வரத்து குறைந்துள்ளது.
ஆனால் அக்டோபர் மாதத்தில் விற்கப்பட்ட தக்காளியின் விலையை விட இந்த மாதம் விலை குறைந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேச பகுதிகளில் இருந்தும் பருவகால வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆந்திரா மாநிலத்தின் மதனப்பள்ளி மற்றும் கர்நாடகாவின் கோலாரில் உள்ள முக்கிய தக்காளி கிடங்குகள் மூலம் நாடு முழுவதும் தக்காளி விநியோகிக்கப்படுகிறது.
மேலும் இந்த மாதம் தக்காளி வரத்து அதிகரித்ததால் நாடு முழுவதும் உள்ள மண்டிகளில் தக்காளியின் விலை சரிந்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மண்டியில் தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்து குவிண்டால் ஒன்று ரூ.2969 என்ற விலையில் விற்பனையாகிறது. இது முன்பு 5,883 ரூபாயாக இருந்தது.
2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டில் தக்காளியின் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக மழை பொழிவானாலும் சரி அதிக வெப்பமானாலும் சரி அவற்றை எதிர்த்துப் போராடக் கூடியதாக இருக்காது. இதன் காரணமாகத்தான் மழை காலங்களில் விலை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு அக்டோபரில் ஆந்திராவில் அதிக மழை பெய்தது. இதன் காரணமாக ஏராளமான விளைச்சல் பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் கடுமையாக உயர்ந்த தக்காளி விலை, தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரிப்பு மற்றும் சாதகமான காலநிலை காரணமாக விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நிவாரணம் ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications