இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்வதற்கு டிசம்பர் 14-ஆம் தேதி வரை கால அவகாசம் விதித்துள்ளது. அதாவது நாளைய தினம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த காலக்கெடுவிற்குள் UIDAI-இன் myAadhaar போர்ட்டல் மூலம் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பிக்க UIDAI பரிந்துரை செய்கிறது.
சிலர் தங்களுடைய மொபைல் நம்பரை மாற்றியிருப்பார்கள். சிலர் தங்களுடைய வீட்டை மாற்றியிருப்பார்கள். இதுபோன்ற விவரங்கள் ஆதார் கார்டில் துல்லியமாக பிரதிபலிக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் இப்படி ஒரு நடைமுறையை UIDAI செயல்படுத்தியுள்ளது. ஆனால் 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் விவரங்களை புதுப்பிப்பது என்பது கட்டாயம் கிடையாது. விவரங்களின் துல்லிய தன்மையை சரி பார்க்கும் பொருட்டு இது போன்ற அப்டேட்டை செய்து கொள்ள UIDAI பரிந்துரைக்கிறது.

இதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர் எந்தவித கட்டணமுமின்றி புதுப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை அதன் பிறகு புதுப்பித்தால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் பல்வேறு காலக்கெடுக்களை வழங்கிய அரசு தற்போது டிசம்பர் 14 வரை வழங்கியுள்ளது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டால் அது தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ செய்திகளின் வாயிலாக வெளிவரும். ஆனால் இந்த செய்தியை எழுதும் வரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை.
ஆதார் கார்டை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: ஆதார் கார்டை ஆன்லைனில் புதுப்பிக்க முதலில் myAadhaar போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "லாகின்" என்பதை கிளிக் செய்து உங்கள் ஆதார் நம்பர், கேப்சா கோடு உள்ளிட்ட விவரங்களை வழங்கி "சென்ட் ஒடிபி" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உள்நுழைந்ததும் "டாக்குமெண்ட் அப்டேட்" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: அங்கு கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை படித்து தெரிந்து கொண்டு "நெக்ஸ்ட்" என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியானவை என்பதை கூறும் வகையில் பாக்சை கிளிக் செய்த "நெக்ஸ்ட்" என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று தொடர்பான ஆவணங்களை அப்லோட் செய்து "சப்மிட்" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு சர்வீஸ் ரெக்வஸ்ட் நம்பர் (SRN) உங்களுடைய ஈமெயிலுக்கு அனுப்பப்படும். இந்த நம்பரை வைத்து புதுப்பிப்பு நிலையை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஆஃப்லைனில் விவரங்களை புதுப்பிக்க விரும்பினால் அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்தை பார்வையிடவும். புவன் ஆதார் போர்ட்டலில் உள்ள "சென்டர் நியர் பை" என்ற டூலை பயன்படுத்தி உங்களுடைய பின்கோடை வழங்கி அருகில் இருக்கும் ஆதார் மையங்களை கண்டுபிடிக்கலாம். தற்போது myAadhaar அப்ளிகேஷன் இன் மூலம் முகவரி புதுப்பிப்புகளை மட்டுமே செய்ய முடியும். பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் புதுப்பிப்புகள் போன்ற பிற விவரங்களை புதுப்பிக்க முடியாது. இனிவரும் எதிர்கால அப்டேட்களில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படும் என்று யுஐடிஏஐ அறிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications