இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான விடுமுறை நாட்கள் காரணமாக உற்பத்தி திறன் குறைவதாக தலைமை செயல் அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கும் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Cleanrooms Containments என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர் ரவிக்குமார் தும்மலச்சாரா. இவர் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விடுமுறை நாட்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். தன்னுடைய லிஙகுடின் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் ரவிக்குமார் ஏப்ரல் மாதத்தில் இருக்கும் விடுமுறை நாட்களை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடுமுறை நாட்கள் காரணமாக பல்வேறு துறைகளிலும் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பொது விடுமுறை மற்றும் விருப்ப விடுமுறை நாட்கள் காரணமாக வேலையில் செயல் திறன் குறைவதாகவும் முக்கியமான துறைகளில் உற்பத்தி திறன் குறைந்து சர்வதேச அளவிலான நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் 10 நாட்களுக்கு மேல் விடுமுறை நாட்கள் வருவதை குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவில் இதன் மூலம் உற்பத்தி திறன் குறைகிறது, வேலையில் தேக்கம் ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.
நம்முடைய கலாச்சாரத்துக்கு உட்பட்டு பண்டிகைகளை கொண்டாட வேண்டும், மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்துக்கு உட்பட்டு வழங்கப்படும் விடுமுறைகளையும் நாம் அனுபவித்துக் கொள்ள வேண்டும், அதை நான் வேண்டாம் என கூறவில்லை. ஆனால் உற்பத்தியை பலிகொடுத்து நாம் கொண்டாட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது போன்ற பொது விடுமுறை மற்றும் விருப்ப விடுமுறைகள் இந்தியாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மை குறைகிறது என கூறியுள்ளார். சீனா பொருளாதாரத்தில் நம்மை முந்தி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். சீனா 60 ஆண்டு காலம் முன்னிலையில் இருக்கிறது ஏனெனில் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் . இதன் காரணமாகவே பல்வேறு இந்தியர்கள் வேலை வேகமாக முடிய வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நம்முடைய விடுமுறை கலாச்சாரத்தை நாம் மறுக்கட்டமைப்பு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கும் அவர் பிரதமர் அலுவலகம், மத்திய தொழில்துறை அமைச்சகம் உள்ளிட்டவர்களை டேக் செய்து இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவு சமூக வலைதளத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பயனர் ஊழியர்கள் இதுபோன்ற விடுமுறையை எடுத்து திரும்ப பணிக்கு வந்தால் தான் அவர்களால் முழுமையான ஈடுபாட்டுடன் வேலையை செய்ய முடியும், ஊழியர்களின் மனநலனும் , வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சீராக நேரம் ஒதுக்குவதும் அந்த ஊழியருக்கும் நல்லது அவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் நல்லது என குறிப்பிட்டுள்ளார்.
தலைமை செயல் அதிகாரிகள் ஊழியர்கள் முழு ஈடுபாட்டுடன் நிறுவனத்திற்காக வேலை செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்களே தவிர அதற்கு ஏற்ற ஊதியம் மற்றும் பாராட்டு உள்ளிட்டவற்றை அந்த ஊழியர்களுக்கு தருகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். ஊழியர்கள் முறையான ஓய்வையும் குடும்பத்தினருடன் செலவிடுவதற்கான நேரத்தையும் பெற்றால் தான் நிறுவனத்துக்கும் நல்லது என ஒரு பயனர் கூறியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications