டெல்லி: மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிரிவில் முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது என்னென்ன என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
1. வருமான வரி அடுக்குகள் மற்றும் வரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதுள்ள பணவீக்க விகிதம் , விலைவாசி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. புதிய வரிமுறையில் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரி அடுக்கில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய வரி நடைமுறையில் தற்போது 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. இந்த 3 லட்சம் ரூபாய் என்ற வருமான வரி உச்ச வரம்பை அரசு 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
3. நிலையான வரி தள்ளுபடி 50,000 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதனை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
4. புதிய வரி நடைமுறையில் தற்போது 80சி பிரிவு என்பது கிடையாது . அதனை புதிய வரி முறையிலும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
5. பழைய வரி நடைமுறையில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடுகளை குறிப்பிட்டு வரி விலக்கு பெறலாம். இந்த வரம்பினை 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
6. வீட்டு கடன்களுக்காக செலுத்தப்படும் வட்டி தொகைக்கான வரிவிலக்கு வரம்பை 3 லட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
7. தற்போது வங்கிகளில் செலுத்தப்படும் டெபாசிட் தொகைகளில் இருந்து நமக்கு கிடைக்கக்கூடிய வட்டி வருமானம் 10,000 ரூபாயை கடந்தால் வரி விதிக்கப்படுகிறது. இதனை உயர்த்த வேண்டும் அவ்வாறு உயர்த்தினால் மக்கள் வங்கிகளில் சென்று முதலீடு செய்வது அதிகரிக்கும்.
8. மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான தொகை தற்போது அதிகரித்துள்ள நிலையில் அதற்கான வரம்பை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என்று ஊதியம் பெறக்கூடிய தனிநபர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
9. வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும் முறையை இன்னும் எளிதாக்க வேண்டும் அவ்வாறு செய்யும்போது இன்னும் ஏராளமானவர்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வார்கள் என சொல்லப்படுகிறது.
10. தற்போது இந்தியாவில் பல்வேறு மூலதனங்களில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கும் நடைமுறை மிகவும் சிக்கலாக இருப்பதால் அதனை எளிமைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications