உலகளவில் அதிக மதிப்புடைய நிறுவனங்களுக்கு ஒரு பெருமையும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பும் உள்ளதோ, அதேபோல் அதிகப்படியான ஊழியர்கள் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு தனி அடையாளம் உள்ளது. அப்படி உலகளவில் அதிகப்படியான ஊழியர்களை கொண்டு இயங்கும் நிறுவனங்களின் பட்டியலில் வோர்ல்டு ஆப் ஸ்டாடிஸ்டிக்ஸ் வெளியிட்டு உள்ளது.
உலகளவிலான பட்டியல் என்பதால் இந்திய நிறுவனங்கள் இருக்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். டாப் 10 பட்டியலில் அதிகளவில் அமெரிக்க நிறுவனங்கள் இருந்தாலும் ஓரேயொரு இந்திய நிறுவனமும் உள்ளது. எந்த நிறுவனம் என கெஸ் பண்ண முடியுமா..?

வோர்ல்டு ஆப் ஸ்டாடிஸ்டிக்ஸ் வெளியிட்டு உள்ள இந்த உலகின் டாப் 10 பட்டியலில் அதிக ஊழியர்களை கொண்டு பெரும் ஊழியர் படையை கொண்டு அசத்துக்கிறது அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் சேவை நிறுவனமான வால்மார்ட். இந்த நிறுவனத்தில் மட்டும் சுமார் 23 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்.
உலகளவில் அதிக ஊழியர்களை கொண்டு உள்ள டாப் 10 பட்டியலில் 5 அமெரிக்க நிறுவனங்கள் உள்ளது. வால்மார்ட் நிறுவனம் 23 லட்சம் ஊழியர்களை கொண்டு உள்ளதன் மூலம் ஒரு தனி நாட்டைய உருவாக்க முடியும், உலகில் சில குட்டி நாடுகளில் கிட்டதட்ட இந்த மக்கள் தொகை தான் உள்ளது.
வால்மார்ட் நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் 15.41 லட்சம் ஊழியர்கள் உடன் 2வது இடத்தில் உள்ளது, இதில் அமேசான் நிறுவனம் பல சுற்றுக்களில் பணிநீக்க அறிவிப்பு செய்யப்பட்டு பின்பான எண்ணிக்கை. அமேசான் 2வது இடத்தில் இப்பட்டியலில் உள்ளது.
3வது இடத்தில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் உள்ளது, உலகிலேயே மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரிக்கும் மாபெரும் நிறுவனமாக பாக்ஸ்கான் உள்ளது. பாக்ஸ்கான் தைவான், சீனா, இந்தியா, வியட்நாம், என பல நாடுகளில் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. இதன் மூலம் உலகின் டாப் 10 பட்டியலில் பாக்ஸ்கான் 8.26 லட்சம் ஊழியர்கள் உடன் 3வது இடத்தில் உள்ளது.
இதை தொடர்ந்து அயர்லாந்து நாட்டின் ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் 7.38 லட்சம் ஊழியர்கள் உடன் 4வது இடத்திலும், ஜெர்மனி நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் 6.45 லட்சம் ஊழியர்கள் உடன் வது இடத்திலும் உள்ளது.
உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்டுள்ள டாப் 10 பட்டியலில் இந்தியாவில் இருந்து டாடா குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் மட்டுமே உள்ளது. 6.16 லட்சம் ஊழியர்கள் உடன் இப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது டிசிஎஸ்.

டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து Deutsche Post 5,83,816 ஊழியர்கள் உடன் 6வது இடத்திலும், யுனைடெட் பார்சல் சர்வீசஸ் 5 லட்சம் ஊழியர்கள் உடன் 7வது இடத்திலும், Kroger 5 லட்சம் ஊழியர்கள் உடன் 8வது இடத்திலும், அமெரிக்காவின் பிரபலமான Home Depot 5 லட்சம் ஊழியர்கள் உடன் 10வது இடத்திலும் உள்ளது.
டாப் 10 பட்டியலில் இல்லமல் இன்போசில் 3,46,845 ஊழியர்கள் உடன் 35வது இடத்திலும், ரிலைலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2,36,334 ஊழியர்கள் உடன் 74வது இடத்திலும் உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications