தலைமை செயல் அதிகாரி பதவின்னா சும்மாவா? இவர்களுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

இந்தியாவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாக பதவி வகிப்பவர்களுக்கு கோடி கோடியாக சம்பளம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ஆம் நிதியாண்டில் சுமார் 1320 தலைமை செயல் அதிகாரிகள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை வாங்கியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை அதிக ஊதியம் பெறும் முதல் 10 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவிக்குமார் சிங்கி செட்டி: இவர் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பதவியேற்றார். இவர் கடந்த ஆண்டில் மட்டும் 186 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இவருக்கு கிடைத்த ஊதியத்தில் கிட்டதட்ட 169 கோடி ரூபாய் பணம் நிறுவன பங்குகளில் கிடைத்த வருவாய் ஆகும்.

தலைமை செயல் அதிகாரி பதவின்னா சும்மாவா? இவர்களுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?


தியரி டெலபோர்ட்: விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் தான் இவர். 2023 ஆம் நிதியாண்டில் 82 கோடி ரூபாய் ஊதியம் பெற்றார். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் அதிக ஊதியம் பெற்ற தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் பதவி விலகினார்.

சந்தீப் கல்ரா: பெர்சிஸ்டென்ட் சிஸ்டம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வரும் சந்தீப் கல்ரா கடந்த நிதியாண்டில் 61.7 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார். இது அதற்கு முந்தைய நிதி ஆண்டை விட 31 சதவிகிதம் அதிகமாகும்.

நிதின் ராகேஷ்: எம்பாசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவர் 2023ஆம் நிதியாண்டில் 59.2 கோடி ரூபாய் ஊதியம் பெற்றிருக்கிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார்.

சலீல் பரேக்: இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரக்கூடிய சலீல் பரேக் கடந்த ஆண்டு 56 கோடி ரூபாய் ஊதியம் பெற்றிருக்கிறார். இவருடைய ஊதியத்தில் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் நிறுவனம் சார்பாக இவருக்கு வழங்கப்பட்ட பங்குகளில் இருந்து கிடைத்த வருவாய் ஆகும்.

சுதிர் சிங்: கோஃபோர்ஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பாட்டு இயக்குனராகவும் பணிபுரிந்து வரக்கூடிய சுதிர் சிங் 34 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார். இவர் 2020 ஆம் ஆண்டிலிருந்து தலைமை செயல் அதிகாரி பொறுப்பினை வகித்து வருகிறார்.

சிபி குருனானி: டெக் மகேந்திரா நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சிபி குருனானி கடந்த 2023 ஆம் நிதியாண்டில் 32 கோடியை வருமானமாக பெற்றிருக்கிறார். இவர் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார். 20 ஆண்டுகாலம் டெக் மகேந்திராவில் இவர் பணிபுரிந்தவர்.

ராஜேஷ் கோபிநாதன்: டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் 2023ஆம் நிதி ஆண்டில் 29.61 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார். இவர் 2023 ஆம் ஆண்டில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விலகினார்.

சி. விஜயகுமார்: ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் மேலான இயக்குனருமான சி. விஜயகுமார் 2023ஆம் ஆண்டில் 28.4 கோடியை ஊதியமாக பெற்று இருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து இவர் இந்த பொறுப்பை வகித்து வருகிறார்.

சஞ்சீவ் மேத்தா: ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் மேத்தா 2023ஆம் நிதியாண்டில் 22.36 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார். இது முந்தைய ஆண்டில் பெற்ற ஊதியத்தை விட சற்றே அதிகமாகும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+