இன்ஸ்டாகிராமில் பணத்தை அள்ளும் டாப் 10 பிரபலங்கள்.. ஒரு போஸ்டுக்கு இவ்வளவு வருமானமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாதவர் எத்தனை பேர், அதில் சமூக வலைதளம் என்பதை பயன்படுத்தாதவர்கள் எத்தனை பேர்? குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு பலருக்கும் வாழ்வாதாரமாக அமைந்ததும், பலரின் பொருட்களுக்கு வியாபார தளமாக அமைந்ததும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் தான்.

 

சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரையில் தவிர்க்க முடியாத ஒன்றாக சமூக வலைதளங்கள் மாறி வருகின்றன. இத்தகைய வாய்ப்புகளை பல்வேறு நிறுவனங்களும் தங்களது பொருட்களுக்கான சிறந்த சந்தையாக மாற்றி வருகின்றன.

யார் வெளியீடு

யார் வெளியீடு

விளம்பரங்களை பிரபலங்கள் மூலம் பகிர வைத்து, அதன் மூலம் நிறுவனங்களும் பலன் அடைகின்றன. பிரபலங்களும் இதன் மூலம் காசு பார்க்கின்றனர். இப்படி வலைதளங்கள் மூலம் காசு பார்க்கும் டாப் 10 பிரபலங்கள் யார் யார்?

இப்படி இன்ஸ்டாகிராம் மூலம் போஸ்ட் செய்பவர்களில் அதிக வருமானம் பார்க்கும் பிரபலங்களின் பட்டியலினை Hopper HQ வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பிரபலமான விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் இடம்பெற்றுள்ளனர்.

 

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பிரபல விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். பலகோடி பயனர்கள் ரொனால்டோவினை பின் தொடருகின்றனர். இவர் ஒரு இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒரு ஸ்பான்சர் பதிவுக்கு 23,97,000 டாலர்களை பெறுகிறார். இவர் கூகுள் டியோ, கிளியர், ஹேர்கேர், நைக் கால் பந்து, சிக்ஸ் பேட் யூரோப் என பலவற்றை புரோமோட் செய்துள்ளார். இவரின் ஒரு போஸ்ட்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் 19 கோடி ரூபாயாகும்.இவரை இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் 500 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர்.

கெய்லே ஜென்னர்
 

கெய்லே ஜென்னர்

இரண்டாவது இடத்தில் இருக்கும் கெய்லே ஜென்னர் 18,35,000 டாலர்களாகும். இவர் இன்ஸ்டாகிராமில் 370 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டுள்ளார். இவரின் இன்றைய வருமானம் ஒரு போஸ்ட்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாயாகும்.

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி

மூன்றாவது இடத்தில் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்த விளையாட்டு வீரர் ஆவார். இவரை இன்ஸ்டாகிராமில் 362 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். இவரின் ஒரு ஸ்பான்சர் போஸ்ட்டுக்கு வருமானம் 17,77,000 டாலர்களாகும். இன்றைய இந்திய மதிப்பில் 14.5 கோடி ரூபாயாகும்.

செலினா கோம்ஸ்

செலினா கோம்ஸ்

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடருபவர்களை கொண்ட பிரபலங்களில் 4வது இடத்தில் செலினா கோம்ஸ் உள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 348 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். இவரின் நடிப்பு திறன், பாடும் திறன் மற்றவர்களை பெரிதும் கவரும் திறன் கொண்டவர். இன்னும் ஏராளமான திறன்களை கொண்டவரின், இன்ஸ்டாவில் ஒரு ஸ்பான்சர் போஸ்ட்டுக்கு வருமானம் 17,35,000 டாலர்களாகும். இன்றைய இந்திய மதிப்பு சுமார் 14 கோடி ரூபாய்.

டுவைன் ஜான்சன்

டுவைன் ஜான்சன்

டுவைன் ஜான்சன் 5வது இடத்தில் இருக்கும் ஹாலிவுட் நடிகராவர். இவரை இன்றும் 338 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். இன்ஸ்டாவில் இவரின் ஒரு ஸ்பான்சர் போஸ்ட்டுக்கான வருமானம் 17,13,000 டாலர்களாகும். இன்றைய இந்திய மதிப்பு சுமார் 13.9 கோடி ரூபாய்.

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன் இந்த வருமான அடிப்படையிலான லிஸ்டில் 6வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவினை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் தொழிலதிபரான கிம், பல பிராண்டுகளை புரோமோட் செய்து வருகின்றார். இவரை 330 மில்லியன் பேர் இன்ஸ்டாவில் பின் தொடருகின்றனர். இன்ஸ்டாவில் இவரின் ஒரு ஸ்பான்சர் போஸ்ட்டுக்கான வருமானம் 16,89,000 டாலர்களாகும். இன்றைய இந்திய மதிப்பு சுமார் 13.7 கோடி ரூபாய்.

அரியானா கிராண்டே

அரியானா கிராண்டே

பாப் ஸ்டார் ஆன அரியானா கிராண்டே ஏழாவது இடத்தில் இருக்கும் ஒரு பிரபலமாகும். இவரை இன்ஸ்டாவில் 332 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். இன்ஸ்டாவில் ஒரு ஸ்பான்சர் போஸ்ட்டுக்கான இவரின் வருமானம் 16,89,000 டாலர்களாகும். இன்றைய இந்திய மதிப்பு சுமார் 13.7 கோடி ரூபாய்.

பியானஸ்

பியானஸ்

பிரபல அமெரிக்க பாடகியான பியானஸ், பாடல் எழுத்தாளரும் கூட. பற்பல விருதுகளை பெற்றுள்ள பியானஸை 275 மில்லியன் பேர் இன்ஸ்டாவில் பின் தொடருகின்றனர். இன்ஸ்டாவில் ஒரு ஸ்பான்சர் போஸ்ட்டுக்கான இவரின் வருமானம் 13,93,000 டாலர்களாகும். இன்றைய இந்திய மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய்.

க்ளோ கர்தாஷியன்

க்ளோ கர்தாஷியன்

இன்ஸ்டாகிராமில் 273 மில்லியன் பின் தொடருபவர்களைக் கோண்டுள்ள க்ளோ கர்தாஷியன், அதிகம் வருமானம் பெறுவோர் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார். இவருக்கு சராசரியாக இன்ஸ்டாவில் ஒரு ஸ்பான்சர் போஸ்ட்டுக்கான இவரின் வருமானம் 13,23,000 டாலர்களாகும். இன்றைய இந்திய மதிப்பு சுமார் 10.5 கோடி ரூபாய்.

கெண்டல் ஜென்னர்

கெண்டல் ஜென்னர்

ஒரு சூப்பர் மாடல் அழகியும், ரியாலிடி ஸ்டாருமான கெண்டல் ஜென்னரை, இன்ஸ்டாகிராமில் 258 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். இவரின் ஒரு ஸ்பான்சர் போஸ்ட்டுக்கான வருமானம் 12,90,000 டாலர்களாகும். இன்றைய இந்திய மதிப்பு சுமார் 10.5 கோடி ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 instagram
English summary

Top 10 highest income Instagram celebrities 2022: who is first place?

Top 10 highest income Instagram celebrities 2022: who is first place?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X