இன்றைய கால கட்டத்தில் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ளது. இந்த சூழ்நிலையில், நமக்கு ஆதரவான மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைவாய்ப்பை கண்டுபிடிப்பது பெரிய சவால். இருந்தாலும், நம் நாட்டில் நினைத்து பார்க்க முடியாத அல்லது பணத்தை கொட்டி கொடுக்கும் வேலைவாய்ப்புகள் பல துறைகளில் உள்ளன. அதிகம் சம்பளம் கொடுக்கும் வேலைகளுக்கு உயர் கல்வி, சிறப்பு திறன்கள் மற்றும் அந்த துறையில் பல வருட அனுபவங்கள் நம்மிடம் இருப்பது முக்கியம்.
பொதுவாக மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், நிதி, மேலாண்மை போன்ற பல துறைகளில் அதிக ஊதியம் கொடுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. அதில், அதிக ஊதியம் கிடைக்கும் 10 வேலைவாய்ப்புகளை நாம் தெரிந்து கொள்வோம்.

மருத்துவ வல்லுநர்கள் (நிபுணர்கள்): மருத்துவ துறையில் பெற்றுள்ள நிபுணத்துவம், அனுபவம் மற்றும் பணிபுரியும் நகரத்தை பொறுத்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி அல்லது அதற்கு மேல் வரை ஊதியம் பெறலாம்.
தகவல் தொழில்நுட்ப வல்லுநனர்கள்: சாப்ட்வேர் டெவல்ப்மெண்ட், டேட்டா சயின்ஸ் மற்றும் ஏ.ஐ. ஆகியவற்றில் சிறந்த நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை பொறுத்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கலாம்.
மேலாண்மை வல்லுநனர்கள்: அனுபவம் வாய்ந்த மேலாளர்கள் தங்களது அனுபவம் மற்றும் நிறுவனத்தை பொறுத்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கலாம்.
முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள்: உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கபட்டால் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேலும் ஊதியம் பெறலாம்.
டேட்டா சயின்டிஸ்ட் மற்றும் ஆய்வாளர்கள்: இந்த பணியில் அனுபவம் மற்றும் திறன்களை பொறுத்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேலும் ஊதியம் பெறலாம்.
என்ஜினீயர்ஸ்: பல்வேறு நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் தனது அனுபவம் மற்றும் பணிபுரியும் நகரம் ஆகியவற்றை பொறுத்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேலும் வருமானம் கிடைக்கும்.
சட்ட வல்லுநர்கள்: அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் தங்களது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேலும் ஊதியம் பெறலாம்.
விமானபோக்குவரத்து நிபுணர்கள்: விமானிகள் தங்களுக்கு உள்ள அனுபவம் மற்றும் பறக்கும் விமானத்தின் வகையை பொறுத்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.
வர்த்தக ஆலோசகர்கள்: நிறுவனத்தில் மூத்த ஆலோசகர்களாக பணிபுரிந்தால் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் ஊதியம் பெறலாம்.
பட்டய கணக்காளர்கள் (CA): அனுபவம் மற்றும் பிராடிக்ஸை பொறுத்து பட்டய கணக்காளர்கள் ஆண்டுக்கு ரூ.5 ல்சம் முதல் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கலாம்.


Click it and Unblock the Notifications