இன்றைய நவீன உலகில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க மக்கள் பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். அதில் ஒன்று வங்கிகளில் கடன் பெறுவது. ஆனால் வங்கிகளுக்குச் சென்று கடன் பெறுவது சற்று நீண்ட நேர செயல்முறையாக இருக்கும். இதற்கு நேர் மாறாக வீட்டில் இருந்தே இன்ஸ்டன்ட் லோன்களை பெறலாம். ஆனால் இன்ஸ்டன்ட் லோன் பெறுவதற்கு முன்பு இதற்க வசூலிக்கப்படும் அதிக வட்டி விகிதங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பதிவில் இன்ஸ்டன்ட் லோன் என்றால் என்ன? இந்த தீபாவளி பண்டிகைக்கு இன்ஸ்டன்ட் லோன் பெறலாமா? என்ற விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
இன்ஸ்டன்ட் லோன் என்றால் என்ன?: இன்ஸ்டன்ட் லோன் என்பது நவீன தொழில்நுட்ப உதவியுடன் குறைந்த நேரத்தில் பெறக்கூடிய கடன்களாகும். இதற்கு நீங்கள் எந்தவித அலுவலகங்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ செல்லத் தேவையில்லை. ஆன்லைன் வழியாக எளிதில் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்று, அதன் பிறகு பணம் பெறலாம்.

இன்ஸ்டன்ட் லோனின் நன்மைகள்: அவசர காலங்களுக்கு பணம் உடனடியாக கிடைக்கும். குறைந்த அளவிலான ஆவணங்களே இன்ஸ்டன்ட் லோன் பெற தேவைப்படுகிறது. வீட்டிலிருந்தபடியே எளிதில் ஆன்லைனில் விண்ணப்பிக்க பணம் பெற்றுக் கொள்ளலாம்.
இன்ஸ்டன்ட் லோனின் தீமைகள்: பொதுவாக இந்த வகை இன்ஸ்டன்ட் லோன்களுக்கு வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கலாம். இது வங்கிகளில் கிடைக்கக்கூடிய வட்டி விகிதங்களை விட அதிகமாக இருக்கும்.
தீபாவளி பண்டிகைக்கு இன்ஸ்டன்ட் லோன் பெறலாமா?: தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது செலவுகள் அதிகரிக்கக் கூடும். அதுவும் இந்த முறை மாதக் கடைசியில் தீபாவளி பண்டிகை வந்துள்ளது.
இதனால் மக்கள் தங்கள் செலவுக்காக பல்வேறு விஷயங்களை ஆராய்கின்றனர். உதாரணமாக குழுக் கடன், வங்கிக் கடன், தங்க நகை கடன் என எதை வைத்து பணம் பெறலாம் என்று யோசிக்கின்றனர்.
அப்படி பெரும் கடன்களில் இந்த இன்ஸ்டன்ட் லோனும் ஒன்று. ஆனால் இன்ஸ்டன்ட் லோனை வாங்கி அவசர அவசரமாக பயன்படுத்துவதை விட முன்கூட்டியே சேமித்து பிறகு செலவு செய்வது சிறந்தது. ஏனெனில் இன்ஸ்டன்ட் லோன்களுக்கு அதிக வட்டி விகிதம் மற்றும் குறைந்த கால அவகாசமே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக நீண்ட காலத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் அபாயமும் உள்ளது.
இன்ஸ்டன்ட் லோன் பெறுவதற்கான 10 அப்ளிகேஷன் பெயர்களை ANI வெளியிட்டுள்ளது.
1. மணி வியூ (Moneyview)
2. கிரெடிட் பீ (Kredit Bee)
3. பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv)
4. இன்ஸ்டா மணி (InstaMoney)
5. கேஷ் (CASHE)
6. பே சென்ஸ் (PaySense)
7. தானி (Dhani)
8. ஃபைப் (Fibe)
9. கிரெடி (Credy)
10. ஸெஸ்ட் மணி (ZestMoney)
இன்ஸ்டன்ட் லோன்களுக்கு வட்டி விகிதங்கள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் பல்வேறு மோசடி சம்பவங்கள் லோன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி நடப்பதால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மேலும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் லோன் விண்ணப்பிப்பதற்கு முன்பு தகுந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, உங்களுடைய நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று விண்ணப்பிக்கவும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications