இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், அமெரிக்காவில் ரெசிஷன் பாதிப்பு குறைந்த காரணத்தால் இனி ரெசிஷன் குறித்து தொடர்ந்து கண்காணிக்கும் பணிகள் தேவையில்லை என அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் குறியது ஐடி துறைக்கு புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது.
ஆனாலும் ஐடி துறை நிறுவனங்கள் கடந்த 5 மாதத்தில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதை யாராலும் மறுக்க முடியாத. டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில். இன்று ஐடி ஊழியர்களை கலங்க வைக்கும் ரிப்போர்ட் வந்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், ஏன் ஒவ்வொரு காலாண்டிலும் அதிகப்படியான வேலைவாய்புகளை உருவாக்குவது ஐடி துறையில் தான், அந்த வகையில் ஜூன் காலாண்டில் இந்தியாவில் டாப் 10 நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு குறைந்தது மட்டும் அல்லாமல் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு என்ன பொருள்..?
பொதுவாக ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியர்கள் வெளியேறுவது இயல்பான ஒன்று, ஆனால் வெளியேறிய ஊழியர் இடத்தில் புதிதாக ஒருவரை நியமித்தால் மொத்த எண்ணிக்கை குறையாது. இதேபோல் புதிய திட்டங்கள் வரும் போது கூடுதலாக ஊழியர்களை சேர்த்தால் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த இரண்டையுமே செய்யாத போதுதான் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை குறையும்.
இப்படி ஜூன் காலாண்டு முடிவில் நாட்டின் டாப் 10 ஐடி நிறுவனங்களின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 21,327 பேர் குறைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 69,634 பேர் அதிகரித்திருந்தனர். டாப் 10 நிறுவனங்கள் பட்டியில் 6 ஐடி சேவை நிறுவனங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் 4 ஐடி ஊழியர்கள் எண்ணிக்கை மட்டுமே உயர்ந்துள்ளது.
ஜூன் காலாண்டில் வருமானம் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட டாப் 10 நிறுவனங்களில் முதல் இடத்தில் இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் வெறும் 523 பேர் மட்டுமே அதிகரித்தள்ளனர். இதுவே இன்போசிஸ் நிறுவனத்தில் 6940 பேர் குறைந்துள்ளனர்.ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் 2506 பேர் குறைந்துள்ளனர், விப்ரோ நிறுவனத்தில் 8812 பேர் குறைந்துள்ளனர், டெக் மஹிந்திரா நிறுவனத்தில் 4103 பேர் குறைந்துள்ளனர்.
எல்டிஐமையின்ட்ரீ நிறுவனத்தில் 1808 பேர் குறைந்துள்ளனர், Mphasis நிறுவனத்தில் 81 பேர் குறைந்துள்ளனர், எல் அண்ட் டி டெக்னாலஜிஸ் சர்வீசஸ் நிறுவனத்தில் 1159 பேர் அதிகரித்துள்ளனர், Presistent நிறுவனத்தில் 241 பேர் அதிகரித்துள்ளனர், கோஃபோர்ஜ் நிறுவனத்தில் 1000 பேர் அதிகரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications