உலகின் டாப் 10 நிறுவனங்கள் எது.. அதன் மதிப்பு எவ்வளவு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகள் பலத்த ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. இதனால் நிறுவனங்களின் சந்தை மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது.

எனினும் இந்த காலக்கட்டத்திலும் 10 மிகப்பெரிய பொது நிறுவனங்கள் எவை எவை? அவற்றின் சந்தை மதிப்பு எவ்வளவு?

எந்த நாட்டினை சேர்ந்த நிறுவனங்கள், இந்த நிறுவனங்கள் என்னென்ன வணிகம் செய்கின்றன? வாருங்கள் பார்க்கலாம்.

உலகளவில் பென்ஷன் திட்டத்தில் இந்தியா படு மோசம்..! உலகளவில் பென்ஷன் திட்டத்தில் இந்தியா படு மோசம்..!

ஆப்பிள்

ஆப்பிள்

டாப் நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 2.310 டிரில்லியன் டாலராகும். இந்த தரவானது அக்டோபர் 19, 2022 நிலவரப்படி companiesmarketcap.comல் எடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் டெக் ஜாம்பவான் ஆன ஆப்பிள் நிறுவனம் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றது. இதன் தலைவர் டிக் குக் ஆவார்.

சவுதி அராம்கோ

சவுதி அராம்கோ

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஜாம்பவான்களில் ஒருவரான சவுதி அராம்கோவின் சந்தை மதிப்பானது, 2.076 டிரில்லியன் டாலராகும். இது சவுதி அரேபியாவின் பொது நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய வருவாயினை ஈட்டி வரும் எண்ணெய் நிறுவனமாகும். இதன் தலைமை செயல் அதிகாரி அமின் ஹெச் நாசர் ஆவார்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்


சர்வதேச டெக் ஜாம்பவான்களில் ஒன்று மைக்ரோசாப்ட் ஆகும். இதன் சந்தை மதிப்பு 1.778 டிரில்லியன் டாலராகும். உலகின் கணினியில் பெரும் புரட்சியினை ஏற்படுத்தியதில் மைக்ரோசாப்ட்-ன் பங்கு மிகப்பெரியது. 1975ம் ஆண்டில் பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில்கேட்ஸ் தொடங்கினார். இது அமெரிக்க நிறுவனமாகும். இதன் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா ஆவார்.

ஆல்பாபெட்

ஆல்பாபெட்

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பஃபெட்டின் சந்தை மதிப்பானது, 1.316 டிரில்லியன் டாலராகும். அமெரிக்காவினை சேர்ந்த டெக் நிறுவனமான இதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையாவார்.

அமேசான்

அமேசான்

அமெரிக்காவினை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், இகாமர்ஸ் வணிகம் தொடங்கி கிளவுட் கம்ப்யூட்டிங் வரையில் வெற்றிகரமாக கோலேச்சி வருகின்றது. இதன் தலைவர் ஜெப் பெசோஸ் ஆவார். உலகின் 5வது பெரிய சந்தை மதிப்புடைய நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பு 1.185 டிரில்லியன் டாலராகும்.

டெஸ்லா

டெஸ்லா

மின்சார கார்களின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமான டெஸ்லா, அமெரிக்காவினை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இதன் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் ஆவார். இது மின்சார வாகனங்கள், பேட்டரிகள், சோலார் பேனர்கள், சோலார் உபகரணங்கள் என பல வணிகங்களையும் செய்து வரும் டெஸ்லா, உலகின் 6வது பெரிய சந்தை மதிப்புடைய நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பு 685.01 பில்லியன் டாலராகும்.

பெர்க்ஷயர் ஹாத்வே

பெர்க்ஷயர் ஹாத்வே

வாரன் பஃபெட்டுக்கு சொந்தமான பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் 7வது இடத்தில் உள்ள அமெரிக்க நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பானது 622.13 பில்லியன் டாலராகும். இது காப்பீடு, பயன்பாடுகள், எரிசக்தி, சரக்கு ரயில் போக்குவரத்து, உற்பத்தி, சில்லறை வணிகம் மற்றும் சேவைகள் உட்படப் பல துறைகளில் பணியாற்றி வருகிறது.

யுனைடெட் ஹெல்த் குரூப்

யுனைடெட் ஹெல்த் குரூப்

யுனைடெட் ஹெல்த் குரூப் - ன் சந்தை மதிப்பானது 488.46 பில்லியன் டாலராகும். இந்த நிறுவனமும் அமெரிக்காவினை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இது ஹெல்த்கேர் சம்பந்தமான அனைத்து நிதி சேவைகளையும் வழங்கி வருகின்றது.

ஜான்சன் அன்ட் ஜான்சன்

ஜான்சன் அன்ட் ஜான்சன்


அமெரிக்காவினை சேர்ந்த மற்றொரு மல்டி நேஷனல் நிறுவனமான ஜான்சன் அன்ட் ஜான்சன், மருத்துவ மற்றும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பு 436.47 பில்லியன் டாலராகும். இதன் தலைமை செயல் அதிகாரி ஜோக்வின் டிவாடோ.

எக்ஸான் மொபில்

எக்ஸான் மொபில்

10வது இடத்தில் உள்ள எக்ஸான் மொபில் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 420.09 பில்லியன் டாலராகும். அமெரிக்காவினை சேர்ந்த இந்த மல்டி நேஷனல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேரன் வூட்ஸ் ஆவார்.

மேற்கண்ட டாப் 10 நிறுவனங்களில் பெரும்பாலும் அமெரிக்காவினை சேர்ந்தவையாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 டாப் 10
English summary

Top 10 largest public companies of 2022 by market capitalization

Apple, Saudi Aramco and Exxon Mobil are the top 10 companies in the world. Most of these companies are from US
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X