யூடியூபில் ஒரு சேனல் தொடங்கி தங்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி சந்தாதாரர்களை பெற்று வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டை பொருத்தவரை இந்தியாவில் கோடீஸ்வரர்களாக இருக்கும் டாப் 10 யூடியூபர்கள் குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கௌரவ் சவுத்ரி - டெக்னிக்கல் குருஜி என அறியப்படுபவர். ராஜஸ்தானின் அஜ்மீரை சேர்ந்த இவர் தொழில்நுட்பம் சார்ந்த சேனலை நடத்தி வருகிறார். 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இவருடைய டெக்னிக்கல் குருஜி யூடியூப் சேனல் 23.7 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இவர் சொத்து மதிப்பு 356 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

புவன் பாம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் . பிபி கே வைன்ஸ் என்ற சேனலை 2015 ஆம் ஆண்டில் தொடங்கி அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையான முறையில் வெளிப்படுத்தினார். தற்போது இவருடைய சேனலை 26.5 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இவருடைய சொத்து மதிப்பு 122 கோடி ஆகும்.
அமித் பந்தனாவின் சொத்து மதிப்பு 80 கோடி ரூபாய் ஆகும். 2017 ஆம் ஆண்டில் தான் தன்னுடைய சேனலை தொடங்கினார். 24.5 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கின்றனர் . அவருடைய தனித்துவமான காமிக்ஸ் ஸ்டைலுக்கு பெருமளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.
அஜய்நகர் என்பவர் 2014 ஆம் ஆண்டில் தொடங்கிய சேனல் தான் கேரிமினாட்டி. தற்போது 44.8 மில்லியன் பேர் இந்த சேனலை பின் தொடர்கின்றனர். 50 கோடி ரூபாய் சொத்துக்கு உரிமையாளராக இவர் மாறி இருக்கிறார்.
நிஷா மதுலிகா ஓய்வு பெற்ற ஒரு பெண்மணி. இவர் ஓய்வு காலத்தில் தன்னுடைய சமையல் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் சேனலை தொடங்கினார். தற்போது 14.6 மில்லியன் பேர் இவருடைய சேனலை பின் தொடர்கின்றனர். இவருடைய சொத்து மதிப்பு 43 கோடியாக இருக்கிறது.
சந்திப் மகேஸ்வரி 41 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் . இவர் மோட்டிவேஷனல் வீடியோக்களை வெளியிடுவதில் புகழ்பெற்றவர். இவர் 2012 ஆம் ஆண்டில் தான் தன்னுடைய யூடியூப் சேனலை தொடங்கினார். 28.5 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.
கான் சார் என்ற யூடியூப் சானலை நடத்தி போட்டி தேர்வுகளை எழுதுபவர்களுக்கு பல்வேறு டிப்ஸ்களை வழங்கக்கூடியவர் ஃபைசல் கான். இவருடைய சொத்து மதிப்பு 41 கோடி ரூபாய் ஆகும்.
ஆசிஸ் சன்சலானி நவீன கால இளம் தலைமுறைகளுக்கு ஏற்ற வகையில் காமெடியான வீடியோக்களை வெளியிடுபவர்தான் இவர். 2014 ஆம் ஆண்டில் தான் இவர் தன்னுடைய சேனலை தொடங்கினார். 30.5 மில்லியன் சந்தாதாரர்களை இவர் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய் ஆகும்.
ஹர்ஸ் பெனிவால் 30 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட யூடியூபர் .இவர் நகைச்சுவையான கண்டன்டுகளை போடுபவர் . 2015 ஆம் ஆண்டில் தான் இவர் சேனலை தொடங்கினார். 16.1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கிறார்.
துருவ் ராத்தே உண்மை அடிப்படையிலான கன்டென்டுகளை வெளியிடுவதில் புகழ்பெற்றவர். குறிப்பாக அரசியல், சுற்றுசூழல் சம்பந்தமாக இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். 2014 ஆம் ஆண்டில் தான் இவர் தன்னுடைய சேனலை தொடங்கினார். 26.3 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கின்றனர் இவருடைய சொத்து மதிப்பு 24 கோடி ரூபாய் ஆகும்.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications