சென்னை: சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை எங்கோ கொண்டு சென்று நிறுத்தி விடும். அந்த அளவுக்கு லாபத்தை வழங்கும் திட்டங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் சில பெரிய அளவில் எழுச்சி கண்டுள்ளன. அவை முதலீட்டாளர்களுக்கு சிறப்பான லாபத்தையும் பெற்று தந்துள்ளன. அந்த வகையில் திறம்பட செயல்பட்ட சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஸ்மால் கேப் ஃபண்டுகள் அற்புதமான வருமானத்தை வழங்கினாலும் அவை நம்ப முடியாத அளவிற்கு நிலையற்றையும் கூட. கடந்த 3 ஆண்டுகளில் 36 சதவீதம் வரை நிலையான வருமானத்தை வழங்கிய 10 ஸ்மால் கேப் பண்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்: குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டு கடந்த 3 ஆண்டுகளில் 35.86 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. அதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் 43 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்: இந்த ஸ்மால்கேப் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் 35 சதவீத வருடாந்திர வருமானத்தையும், கடந்த 5 ஆண்டுகளில் 33.25 சதவீத வருடாந்திர வருமானத்தையும் அளித்துள்ளது.
ஃபிராங்க்ளின் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்: இந்த ஃபிராங்க்ளின் இந்தியா ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளில் 32.56 சதவீத வருடாந்திர வருமானத்தைக் கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், முதலீட்டாளர்கள் 26.5 சதவீத ஆண்டு வருமானத்தைப் பெற்றிருப்பார்கள்.
HSBC ஸ்மால் கேப் ஃபண்ட்: HSBC ஸ்மால் கேப் ஃபண்டின் 3 ஆண்டு வருடாந்திர வருமானம் 32.41 சதவீதம் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்தவர்கள் ஆண்டு வருமானமாக 28.06 சதவீதத்தைப் பெற்றிப்பார்கள்.
பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட்: கடந்த 3 ஆண்டுகளில், பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 30.71 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது.
டாடா ஸ்மால் கேப் ஃபண்ட்: கடந்த 3 ஆண்டுகளில், டாடா ஸ்மால் கேப் ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு 30.27 சதவீத வருடாந்திர வருமானத்தை பெற்றுத்தந்தது. அதே போல 5 ஆண்டுகளில் 30.83 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது.
இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட்: இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் 30.02 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 29.59 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது.
HDFC ஸ்மால் கேப் ஃபண்ட்: இந்த ஸ்மால் கேப் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 3 ஆண்டுகளில் 29.47 சதவீத வருடாந்திர வருவாயையும், கடந்த 5 ஆண்டுகளில் 25.57 சதவீத வருமானத்தையும் அளித்துள்ளது.
எல்ஐசி எம்எஃப் ஸ்மால் கேப் ஃபண்ட்: எல்ஐசி எம்எஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் 29.98 சதவீத வருடாந்திர வருமானத்தையும், 5 ஆண்டுகளில் 27.03 சதவீத வருமானத்தையும் பெற்றுத் தந்துள்ளது.
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட்: இந்த ஸ்மால் கேப் ஃபண்ட், கடந்த 3 ஆண்டுகளில் வருடாந்திர அடிப்படையில் 28.81 சதவீதம் மற்றும் 5 ஆண்டுகளில் 31.16 சதவீத வருவாய் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications